ஸ்ரீநகரில் கல்லெறிந்த நபரை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றதா ?

பரவிய செய்தி

நேற்று ஸ்ரீநகரில் மீண்டும் கல்லெறியும் கலாச்சாரத்தை துவங்கிய பாகிஸ்தான்காரனுக்கு பிறந்த பன்றிகளை ஒரே போடாக போட்டுத் தள்ளியது இந்திய இராணுவம்.!

மதிப்பீடு

விளக்கம்

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் இராணுவத்தினரின் மீது கல்லெறிபவர்களுக்குத் தோட்டாக்கள் மூலம் இராணுவம் பதிலளிப்பதாகவும், இதே போல லஞ்சம் வாங்குபவருக்குத் தண்டனை அளித்தால் எப்படி இருக்கும் எனக் கூறி இவ்வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Archive link 

இதே வீடியோவை “ஸ்ரீநகரில் மீண்டும் கல்லெறியும் கலாச்சாரத்தைத் துவங்கிய பாகிஸ்தான் காரனுக்குப் பிறந்த பன்றிகளை ஒரே போடாக போட்டுத் தள்ளியது இந்திய ராணுவம்” என்ற வாசகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்பட்ட வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்ததில், கடந்த ஆகஸ்டு 8ம் தேதி Red bolivision என்ற வலைத்தளத்தில் இந்த காணொளி பற்றிய செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் பொலிவியா நாட்டில் நடைபெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக அங்குள்ள கோக்கோ விவசாயிகள் “parallel market” என்ற திட்டத்தை எதிர்த்து அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராடி வந்துள்ளனர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர் வினையாகப் போராட்டக்காரர்களில் ஒருவர் தான் தயாரித்த வெடிகுண்டினை வீசியுள்ளார். மற்றொரு வெடிகுண்டினை தனது இடது கையில் வைத்திருக்கையில் எதிர்பாராத விதமாக அது வெடித்துள்ளது.

மிகுந்த காயத்திற்குள்ளான அந்நபரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததில், மிக இக்கட்டான நிலையில் அவர் உயிர் தப்பியதாகவும், இருப்பினும் அவர் தனது இடது கையினை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், ஸ்ரீநகரில் கல்லெறிந்த நபரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகப் பரப்பப்படும் வீடியோ மற்றும் தகவல் பொய்யானது. வைரல் செய்யப்படும் வீடியோ பொலிவியாவில் நிகழ்ந்தது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader