ஸ்ரீபெரும்புதூர் பெண் தொழிலாளர் உயிரிழந்ததாக பரவும் வாட்ஸ் அப் வதந்தி !

பரவிய செய்தி
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் விடுதியில் தரமற்ற உணவு உண்டதால் உயிரிழந்த பெண் எனப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ !
மதிப்பீடு
விளக்கம்
ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்ட விடுதியில் தரமற்ற உணவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் சிலர் காணாமல் போனதாக பெரும் போராட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்டவர்களில் சில பெண் தொழிலாளர்கள் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் ஃபார்வர்டு தகவல் வைரலாகியது. ஒரு பெண்ணின் புகைப்படமும், இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படும் மற்றொரு வீடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அதில், 2 பெண்கள் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் வதந்தியே என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலை குறிப்பிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : விஷமான விடுதி உணவு: 8 பேர் எங்கே என தொழிலாளர்கள் போராட்டம்.. மா.ஆட்சியர் விளக்கம் !
அடுத்ததாக, வைரல் செய்யப்பட்ட வீடியோ டிசம்பர் 17-ம் தேதி பரணி எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. நெல்லை சாஃப்டர் பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்திய காட்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் விடுதியில் உணவு உண்டு பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்த பெண் எனப் பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.