ஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா ?| ஃபேஸ்புக் பதிவு .

பரவிய செய்தி

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தான் கட்டிய ஜமா மஸ்ஜித்தின் சுவர்கள் வேறு கதையைச் சொல்கின்றன. புரிந்தவர் காவி. புரியாதவன் பகுத்தறிவாதி…

மதிப்பீடு

விளக்கம்

மைசூர் புலி ” என அழைக்கப்படும் மைசூரின் அரசர் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்ட கதைகள் குறித்து படித்து இருப்போம். எனினும் , திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன , கோவில்கள் இருந்த இடத்தில் மசூதிகளை கட்டினார்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரவி இருப்பதை பார்க்க முடியும்.

Advertisement

Facebook post archived link  

அந்த குற்றச்சாட்டுகள் உண்மையா ? பொய்யா ? என்பது குறித்த விவாதத்திற்கு நாம் செல்லவில்லை. அதற்கு மாறாக , கர்நாடகா மாநிலத்தின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜமா மஸ்ஜித் உடைய சுவர்கள் பார்ப்பதற்கு இந்துக் கோவில்களின் தோற்றத்தில் இருப்பதை வட்டமிட்டு ” புரிந்தவர்கள் காவி ” , ” புரியாதவர்கள் பகுத்தறிவாதி ” என்ற வாசகங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம் .

உண்மை என்ன ? 

கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டின ஜமா மஸ்ஜித் இந்து கோவிலில் கட்டப்பட்டதாக எழும் சர்ச்சை புதிது அல்ல. 2018-ல் ஸ்ரீரங்கப்பட்டின ஜமா மஸ்ஜித் ஹனுமான் மந்திர் மீது தான் கட்டப்பட்டு இருப்பதாக வரலாற்றாசிரியர் எல்.என்.சாஸ்திரி எழுதிய புத்தகம் கூறுவதாக விவாதம் கன்னட செய்தி நிறுவனமான Dickvijay சேனலில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

News video archived link 

2018-ம் ஆண்டு திக்விஜய் என்ற கன்னட சேனல் , தாங்களே ஒரு குழுவை அமைத்து ஜமா மஸ்ஜித் குறித்த ஆய்வை மேற்கொண்டதாக செய்தியின் தொடக்கத்தில் கூறுகின்றனர். பின்னர், மஸ்ஜித்தில் உள்ள தூண்களில் பொறிக்கப்பட்டு இருக்கும் உருவங்களை வட்டமிட்டு காண்பித்து உள்ளனர் . மேலும், ஓர் ஆவணத்தில் ஹனுமான் மந்தீர் என குறிப்பிட்டு இருப்பதாக காண்பித்து இருந்தனர்.

அதில், பேசியவர்கள் நேரில் மஸ்ஜித் உள்ளே கருவறை போன்ற பகுதி இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் என பேசும் பேச்சுக்கள் மட்டுமே இடம்பெற்று இருப்பதாக கன்னட மொழியில் இருந்து யூடர்னுக்கு மொழிபெயர்த்து கூறியவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோவில் தொல்லியல்துறை சார்ந்தவர்களோ அல்லது அரசு தரப்பில் இருந்தோ யாரும் பதில் அளிக்கவில்லை. மேலும், ஆதாரங்கள் என எதுவும் காண்பிக்கவில்லை, தூண்களின் புகைப்படங்கள் , நேரில் சென்று பார்க்கவும் ,  நாங்கள் கூறினால் நம்புவீர்களா என்ற வார்த்தைகளை  வீடியோவில் இருப்பவர்கள் அதிகம் உபயோகப்படுத்தியதாக அவர் நமக்கு கூறினார். கூடுதலாக , செய்தி சேனலின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

200 ஆண்டுகளுக்கு முன்பாக திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் இந்து கோவில் எனச் சர்ச்சை எழுந்தால், அது இந்திய அளவில் கவனம் பெற்று ஊடகங்களில் விவாதமாகி இருக்கும். ஆனால், திக்விஜய் என்ற செய்தியை தவிர முதன்மை கன்னட செய்தியில் கூட இதுகுறித்த விவாதங்கள் எழவில்லை என்பதை காண முடிந்தது.

கட்டிடக்கலை : 

Tripadvisor என்ற தளத்தில் ஸ்ரீரங்கப்பட்டின ஜமா மஸ்ஜித் பயணம் தொடர்பாக வெளியிட்ட பல புகைப்படங்களில் கன்னடம் , ஹிந்தி , ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இடம்பெற்ற அறிவிப்பு பலகை ஒன்றை காண நேரிட்டது. அதில் ஆங்கிலத்தில் இடம்பெற்ற தகவலில் இறுதி வரிகளில்,

” இந்த கட்டிடம் இந்து மற்றும் இஸ்லாமிக் கட்டிடக்கலையின் கலவைக்கு ஆச்சரியமான உதாரணம் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்திய நிலப்பரப்பில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனித்துவமான கட்டிடக்கலை இருக்கும். இந்து மற்றும் இஸ்லாமிக் ஆகிய மதங்களை சார்ந்த கட்டிடக்கலையின் உருவாக்கமாக ஸ்ரீரங்கப்பட்டின ஜமா மஸ்ஜித் இருப்பதாக அறிவிப்பு பலகையில் இருக்கிறது.

முடிவு : 

நம்முடைய தேடலில் , ஸ்ரீரங்கப்பட்டினத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஜமா மஸ்ஜித் ஆனது இந்துக் கோவிலை இடித்துவிட்டு அதன் மீது கட்டப்பட்டதாக கூறும் தகவலுக்கு ஆதாரங்கள் இல்லை.

2018-ல் கன்னட செய்தி ஒன்றில் விசாரணை செய்வதாக வீடியோ வெளியிட்டு இருந்தனர். எனினும் , அவர்களும் உறுதியான ஆதாரங்களை அளிக்கவில்லை. முதன்மை ஊடகங்களில் சிறு செய்தி கூட இல்லை.

ஜமா மஸ்ஜித் பகுதியில் உள்ள மஸ்ஜித் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையில் இந்து மற்றும் இஸ்லாமியக் கட்டிடக்கலை என தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதேபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியக் கட்டிடக்கலையில் மஸ்ஜித்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close