This article is from Oct 21, 2018

ஸ்டாலின் ஆயுதபூஜை கொண்டாடுவதாக பதிவிட்ட படம் ?

பரவிய செய்தி

மேடையில் கடவுள் மறுப்பு. கலைஞர் டிவியில் விடுமுறை தினம். அறிவாலயத்தில் ஆயுத பூஜை. எதுக்கு இந்த பல வேஷம் ஸ்டாலின்.

மதிப்பீடு

சுருக்கம்

ஸ்டாலின் கடவுள் மறுப்பு பேசிவிட்டு அண்ணா அறிவாலயத்தில் ஆயுதப் பூஜை நாளில் பூஜை செய்வதாக என கே.டி.ராகவன் பதிவிட்ட படமானது 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டவை.

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊடக நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கே.டி.ராகவன் தன் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பூக்கள் தூவும் படத்தை வெளியிட்டு அறிவாலயத்தில் ஆயுத பூஜை, மேடையில் கடவுள் மறுப்பு பேசுவதாக பதிவிட்டு இருந்தார்.

stalin 3

கே.டி.ராகவனின் இந்த பதிவு தவறான ஒன்றே. காரணம், ஸ்டாலின் மலர் தூவும் படங்கள் அறிவாலயத்திலோ அல்லது பூஜை நிகழ்ச்சியிலோ எடுக்கப்படவில்லை. தேவையற்ற வீண் வதந்தியை பதிவிட்டு உள்ளார்.

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திமுக சார்பில் ” நமக்கு நாமே ” பயணத்தின் 11-வது நாளாக நாகப்பட்டினம் சென்ற ஸ்டாலின் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் இப்படங்களும். நாகப்பட்டினத்தில் சுனாமியால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த மலர் வளையம் வைத்துள்ளார். அங்கு மலர் வளையம் உள்ளதையும் நன்றாக பார்க்கவும்.

மேலும், நாகப்பட்டினத்தில் மேற்கொண்ட பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அதில், கே.டி.ராகவன் பதிவிட்ட படமும் உள்ளது.

சமூக வலைத்தளத்தில் அரசியல் சார்ந்தோரே வீண் வதந்திகளை பதிவிடுவது இது முதல் முறை அல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader