திருப்பூரில் துறைமுகம் அமைப்போம் என்றாரா ஸ்டாலின் ?

பரவிய செய்தி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் நகரமாம் திருப்பூரில் புதிய துறைமுகம் கொண்டு வருமோம் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

மதிப்பீடு

விளக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பூரில் துறைமுகத்தை கொண்டு வருவோம் என கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலே இல்லாத திருப்பூர் பகுதியில் துறைமுகம் கொண்டு வருவதாக ஸ்டாலின் பேசியுள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement

மீம்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரே தங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டு உள்ளனர். News 7 செய்தி நிறுவனத்தின் Breaking news பதிவில் ஸ்டாலின் கூறியது இடம்பெற்றது போன்று பதிவிட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செய்தி நிறுவனங்களின் Breaking news என்று போட்டோஷாப் செய்து பதிவிடுவது அதிகரித்து வருகிறது. சிலரை கேலி செய்வதற்காகவே செய்தி நிறுவனத்தின் Breaking news என போட்டோஷாப் செய்வது வழக்கம்.

ஜனவரி 30-ம் தேதி ஈரோட்டுக்கு சென்ற ஸ்டாலின் கலைஞர் சிலையை திறந்து வைத்த பிறகு திருப்பூரில் துறைமுகம் அமைக்கப்படும் எனக் கூறியதாக எந்தவொரு செய்தியிலும் வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் கட்சி ஆதரவாளர்கள் தாங்கள் பார்ப்பதை உண்மையா என அறியாமல் பகிர்ந்து விடுகின்றனர் என்றால், கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் கூட அறியாமலேயேவா பகிர்வது.

Advertisement

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றிய போலியான Breaking news பதிவுடன் “ திருப்பூரில் துறைமுகமா ! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும் “ என பதிவிட்டு உள்ளனர்.

ஆனால், ஸ்டாலின் பற்றி அப்படி ஒரு செய்தியே வெளியிடவில்லை என தமிழக பிஜேபி கட்சியை tag செய்து News 7 செய்தி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

ஆகையால், சில மணி நேரங்களில் பிஜேபி பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும், பிற ஊடகத்தின் பெயரிலும் இதே பதிவுகள் போட்டோஷாப் செய்து பதிவிடப்படுகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button