பெண்களுக்கு உதவும் ” Stand and pee ” சாதனம் | குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு.

பரவிய செய்தி

டெல்லி ஐ.ஐ.டி-யில் பி.டெக் படிக்கும் 19-வது மாணவர்களான அர்சித் அகர்வால் மற்றும் ஹாரி செராவத் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உடன் இணைந்து “ Stand and Pee “(பெண்கள் நின்றபடியே சிறுநீர் கழிக்க உதவும் சாதனம்) ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

தங்களின் முயற்சிக் குறித்து இந்தியா டுடே-வில் அளித்த பேட்டியில், தங்களின் தோழி ஒருவருக்கு சிறுநீரகப் பாதை தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அதற்கான தீர்வுகளை இணையத்தில் கண்டுபிடித்தும் பயனில்லை என்பதால் இந்த சாதனத்தைக் கண்டுபிடித்ததாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ஆகையால், இதற்கு “ Sanfe “ – SANitation Female என பெயரிட்டுள்ளனர். மேலும், இந்தியாவின் முதல் “ Stand and Pee “ சாதனம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடித்த “ Sanfe “பெண்கள் சிறுநீர் கழிக்க உதவும் இந்தியாவின் முதல் சாதனம் அல்ல. இந்தியாவில் Peebudy என்ற நிறுவனம் இதே போன்ற சாதனத்தை 2015-ல் முதன் முதலில் விற்பனை செய்துள்ளது. மேலும், பிற நாடுகளில் இதே மாதிரியான சாதனங்கள் 1919 முதலே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

விளக்கம்

“ Stand and Pee “ என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் நின்றபடியே சிறுநீர் கழிக்க என்பதாகும். பொது இடங்கள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பெண்கள் பயன்படுத்தும் போது சிறுநீரகத் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்களை விட பெண்களுக்கு பொது இடங்களில் அல்லது சுகாதாரம் இல்லாத கழிவறையைப் பயன்படுத்துவதில் சிரமம் அதிகம். இதற்கு தீர்வு காண உதவுவதே Stand and Pee சாதனம்.

நவம்பர் 2018-ல் இந்தியா டுடே-வில் பேட்டி அளித்த டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் அர்சித் அகர்வால் மற்றும் ஹாரி செராவத் அனைத்து வயது பெண்களும் பயன்படுத்தும் வடிவங்களில் “ Sanfe “ என்ற சாதனத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கியதாக தெரிவித்து இருந்தனர். அவர்களின் சாதனம் ரூ.10 என்ற விலையில் பெண்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் உருவாக்கியது பாராட்டத்தக்க ஒன்று. ஆனால், இந்தியாவிலேயே முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறுவது தவறு.

Peebudy :

மொஹித் பஜாஜ் மற்றும் தீப் பஜாஜ் ஆகியோருக்கு சொந்தமான PeeBuddy Private limited என்ற நிறுவனம் 2015-ல் “ stand and pee “ சாதனத்தின் வடிவமைப்புக்கான காப்புரிமையை பெற்றனர். இன்றுவரை விற்பனையும் செய்து வருகின்றனர். 20 எண்ணிக்கை கொண்ட பாக்கெட் 370 ரூபாயாகும். இதனைப் பற்றி இந்தியாவின் பிரபல பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

சாதனத்தின் உருவாக்கம் தொடக்கம் :

இன்றைய நவீன காலத்தில் பயன்படுத்தும் பெண்கள் சிறுநீர் கழிக்க உதவும் சாதனத்திற்கு(Female urination device ) 1919-ல் காப்புரிமைப் பெறப்பட்டுள்ளது. Edyth Lacy என்பவர் ஒருமுறை பயன்படுத்தும் மலிவான சாதனத்தை கொண்டு வந்தார். இன்று பல்வேறு பிராண்டுகளில் 24 வகையான சாதனங்கள்(Female urination device) விற்பனை செய்யப்படுகிறது.

இதில், பாதிக்கு மேற்பட்டவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும், மீதமுள்ளவை மறுமுறை பயன்படுத்தக் கூடிய வகையில் பிளாஸ்டிக் அல்லது சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டவை.

“ stand and pee “ சாதனத்தின் சில வடிவங்கள் :

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்பைடயில் ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடித்த சாதனம் புதிய வடிவமைப்பு என கூறலாம் தவிர இந்தியாவில் முதல் கண்டுபிடிப்பு எனக் கூற முடியாது.

“ stand and pee “ சாதனத்தின் முக்கியப் பயன்பாடே கர்ப்பிணி பெண்கள், மூட்டு வீக்கம் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகவே. மேலும், அனைத்து வயது பெண்களும் சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்தும் சிரமங்களில் இருந்தும் இது போன்ற சாதனங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Donation pls, என்றவுடன் ஆகா காசு கேட்கிறார்களே என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை நிதி உதவியாக செய்யலாம். உங்களின் (மக்களின்) பத்திரிகையாக இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா/ உதவியாக தரலாம்.

Donate with

Please complete the required fields.
ஆதாரம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close