நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி கோரியதா?

பரவிய செய்தி
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று இன்று வெளியிட்டது.
மதிப்பீடு
சுருக்கம்
+2 தேர்வுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடத்தப்பட்டது. தமிழகம் சார்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்களும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களும் மற்றும் சில முக்கிய ஆலோசகர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற்றனர்.கூட்டத்திற்கு பிறகு நீட் தேர்வு குறித்து தமிழக அமைச்சர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது
இந்நிலையில், “மத்திய அரசின் மருத்துவ சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் நீட் தேர்வு நடத்திக்கொள்ளலாம், மாநில சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு என தனி தேர்வு நடத்த உள்ளதாக பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின.
ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அளித்துள்ள பேட்டியில் , “நீட் தேர்வை நடத்தக் கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் வேண்டுமென்றால் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடத்திக்கொள்ளுங்கள்.” என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலே இணைக்கப்பட்டு உள்ள காணொளியில் 4.16 ஆம் நிமிடத்தில் அமைச்சர் “அந்த அந்த மாநிலத்தில் முதலில் நடந்த தேர்வையே தொடர கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறுவார்.
பின்னர் செய்தியாளர் ஒருவர் “அப்பொழுது முதலில் நடந்த 12ஆம் வகுப்பு தேர்வையே தொடர்வதா?” என்று வினா எழுப்பிய போது “ஆம் நீட் தேர்வே வேண்டாம்… மாநிலத்தில் முதலில் நடந்த தேர்வையே தொடரவும், மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களில் மட்டும் நீட் நடத்திகொள்ளவும் கோரிக்கை வைத்து உள்ளோம்” என் கூறி உள்ளார்.
#BREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!#SunNews | #NEET | #TNGovt | #CentralGovernment pic.twitter.com/Jkb5vRcxQO
— Sun News (@sunnewstamil) May 23, 2021
விளக்கம்
மாநிலத்தில் முன்பு நடைமுறையில் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வின் தேர்ச்சி அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கையை தொடரவும், மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களில் மட்டும் நீட் நடத்திகொள்ளவும் கோரிக்கை வைத்து உள்ளதை தவறுதலாக மாநில அளவில் தேர்வு நடத்த தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி செய்தியை வெளியிட்டு விட்டது.