ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கி வைத்தது கலைஞரா ?

பரவிய செய்தி

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்த தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள்.

மதிப்பீடு

விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் வன்முறை சம்பவம் உருவாகியதாகக் கூறி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தூத்துக்குடி போராட்டத்தை திசை திருப்ப பல புரளிகளும், அரசியல் கட்சியினர் மீது கோபத்தை சித்தரிக்கும் போலியான செய்திகள் பரப்பப்பட்டன.

Advertisement

அதில், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான குருமூர்த்தி அவர்கள் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட பதிவில், “ ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்த கருணாநிதி தமிழகம் சிறந்த தொழில்வளம் மிகுந்த மாநிலம் என்று பாராட்டினார். ஆனால், ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆபத்து அதை மூட வேண்டும் என்று கூறுகிறார் ” என்று ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட படத்தை இணைத்து இருந்தார். எனினும், இந்த பதிவு அவரது கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு மகாராஷ்டிரா, குஜராத், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்களின் எதிர்ப்புகள் வலுவாக இருந்த நிலையில் தமிழகத்தில் ஆலையை அமைக்க 1994- ஆம் ஆண்டு அனுமதி அளித்ததுஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. இதையடுத்து, 1994 அக்டோபர் மாதம் ரூ.1300 கோடி மதிப்பிலான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பங்கேற்றார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழக மக்கள் அனைவருடைய ஏகோபித்த ஆதரவோடு உங்கள் அன்பு சகோதரியாகிய நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் ” என்று விழாவில் தனது உரையில் கூறியிருப்பார்.

இந்த வரிகளை படிக்காமல் ஜெயலலிதா நிற்கும் புகைப்படத்திற்கு பதிலாக கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். அரசியல் பற்றி அறியாத மக்கள் சிலர் இதை உண்மை என நினைத்து பகிர்ந்தும் உள்ளனர்.

Advertisement

ஆனால், அரசியலில் ஊறிப்போன குருமூர்த்தி போன்ற பத்திரிகை ஆசிரியர் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கப்பட்டது எப்போது , யார் தொடங்கினர் என்று அறியாமலா இருப்பார். தங்களின் அரசியல் விமர்சனத்தை கடுமையாக போலியான செய்தியின் மூலம் பகிர்ந்து விட்டு பின் நீக்கி இருக்கிறார். தூத்துக்குடி விவகாரத்தில் போராட்டத்தை திசை திருப்ப எதுவேண்டுமானாலும் செய்யப்படலாம் காரணம் அனைத்தும் அரசியலே..!

Twitter link | archive link

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button