This article is from May 11, 2018

கணவனின் நினைவாக ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டிய சுபாஷினி மிஸ்ட்ரி.

பரவிய செய்தி

தனது 23 வயதில் இறந்த கணவரின் நினைவாக வீட்டு வேலை, கூலி வேலைகள் செய்து இலவச மருத்துவமனை கட்டி 70 வயதிலும் சேவை செய்து வரும் சுபாஷினி மிஸ்ட்ரி அவர்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

பல ஆண்டுகள் தனது கடுமையான உழைப்பின் பயனாக மருத்துவமனை ஒன்றை கட்டி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ கிடைக்கும்படி செய்துள்ளார் சுபாஷினி மிஸ்ட்ரி.

விளக்கம்

12 வயதில் திருமணம் 24 வயதில் கணவனை இழந்த விதவை. வாழ்கையில் இதுபோன்ற இழப்பை சந்தித்தும் பொதுநல எண்ணம் தோன்றுவது என்பது சாதாரணமானவை அல்ல.

கொல்கத்தாவைச் சேர்ந்த 75 வயதான சுபாஷினி மிஸ்ட்ரி ஏழை எளிய மக்களுக்கு உதவ இலவச மருத்துவமனை ஒன்றை அமைத்து பலரின் வாழ்வை வளம் பெற செய்துள்ளார். 24 வயதில் கணவனை இழந்த தருணத்தில் மனம் உடைந்து போகினார். எனினும், வாழ்க்கையை புரிந்து கொண்ட சுபாஷினி மிஸ்ட்ரி, முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த தன் கணவனை போல் இனி யாரும் பணம் இன்றி இறக்கக் கூடாது என முடிவெடுத்தார்.

கணவனை இழந்த சுபாஷினி தனது கடைசி மகன் அஜயை ஆசிரமத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். தனது ஒரு மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்துள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட முடிவெடுத்தாலும், போதிய படிப்பு இல்லாததால் தனது வாழ்கையில் நீண்ட காலம் Park circus footbridge பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

மேலும், தனக்கு கிடைக்கும் நேரத்தில் காய்கறிகள் விற்று அதில் கிடைக்கும் பணத்தையும் சேமித்து வந்துள்ளார். இதையடுத்து வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி 20 வருடங்கள் தம்மால் முடிந்த அளவு பணத்தை சேமித்து வந்துள்ளார். அதே நேரத்தில் தனது மகன் அஜயின் படிப்பிற்கும் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

1992 ஆம் ஆண்டில் தனது கணவரின் கிராமமான தாகூர்பூர் ஹன்சுபூரில் நிலம் ஒன்றை 10,000 ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளார். அது ஒன்றும் அவ்வளவு எளிதாக வாங்கவில்லை. குறைந்த பணமே இருந்ததால் நிலத்தை தர மறுத்த நிலத்திற்கு சொந்தக்காரரின் காலில் விழுந்து வேண்டி நிலத்தை வாங்கினேன். அவர் நிலத்தை வழங்கிய பிறகுதான் என்னுடைய பாதி கனவு நிறைவேறியதாக சுபாஷினி மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.

1993-ம் ஆண்டில் Humanity Trust தொடங்கி தற்காலிக மருத்துவ மையத்தை அமைத்து உள்ளூர் வாசிகளுக்கு உதவ போவதாக அக்கிராம மக்களிடம் கூறியுள்ளார். சுபாஷினி மிஸ்ட்ரியின் இத்தகைய தொண்டுக்கு அங்குள்ள மக்கள் பலர் பணம், கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் கட்டிட பணியில் இலவசமாக வேலை செய்தது போன்ற காரியத்தை செய்துள்ளனர். 1993-ல் இம்மருத்துவமனையில் 250 பேருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யாரும் பணம் பெறவில்லை.

1996-ல் நிரந்தரமாக கட்டிடம் ஒன்றை அமைத்து அதை மேற்கு வங்கம் ஆளுநர் கே.வி.ரகுநாத் ரெட்டியின் கரங்களால் திறந்து வைத்தார். 2009-ல் மைன்ட் ஆஃப் ஸ்டீல் பிரிவில் Prestigious god Frey Philips bravery என்ற விருதை பெற்றார்.

சுபாஷினி மிஸ்ட்ரி அவர்களின் மகன் அஜய் டாக்டராக அதே மருத்துவமனையில் சேவை புரிந்து வருகிறார். அவருக்காக பாதர்ப்ரதிமா என்ற பகுதியில் ஒரு பிரிவை அமைத்து மக்களுக்கு உதவி புரிய வழி செய்துள்ளார். அஜய் உடன் சேர்ந்து இரு மருத்துவமனையில் 12 மருத்துவர்கள் மற்றும் 25 படுக்கைகள் உள்ளன. மேலும், பல ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கடுமையான முயற்சியில் பல நல் உள்ளங்களின் உதவியால் தன் கனவை நிறைவேற்றிய சுபாஷினி மிஸ்ட்ரி, தனது பணி இன்னும் முடியவில்லை. இந்த இரு மருத்துவமனையும் 24 மணி நேரமும் இயங்கும் விதத்தில் பல சேவை மனப்பாங்கு உடைய ஊழியர்களை சேர்க்க வேண்டும் என்றும், எனது முயற்சிக்கு அரசு உதவி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுநலத்துடன் ஏழை மக்களுக்கு சுபாஷினி மிஸ்ட்ரி ஆற்றிய தொண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருதினை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader