This article is from May 06, 2021

சூடான் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் நிலை என பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி

இவர் சூடான் நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.. அல்லாஹ் நாடினால் சொட்ப நேரம் நம் வாழ்க்கையை மாற்றுவதுக்கு..

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மெலிந்த தேகத்துடன் இருக்கும் முதியவரின் புகைப்படம் மற்றும் ராணுவ உடையில் இருக்கும் ஒருவரின் புகைப்படம் ஆகியவற்றை ஒற்றுமைப்படுத்தி, இவர் சூடான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் எனக் கூறி மதம்சார்ந்த வார்த்தைகளுடன் இப்பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

Twitter archive link

வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், ” நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான கென்யர்கள் பட்டினியில் கிடக்கின்றனர் ” என 2019 மார்ச் 19-ம் தேதி TV47 Kenya எனும் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருப்பதை காண முடிந்தது.

2019-ல் பிபிசி ஆங்கில செய்தியில், கென்ய மக்களின் பட்டினி குறித்து வெளியான கட்டுரையில் அதே முதியவரின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

2019-ல் AFP எனும் ஆப்பிரிக்காவை சேர்ந்த உண்மைக் கண்டறிதல் தளம் வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் குறித்து வெளியிட்ட கட்டுரையில், ” இராணுவ சீருடையில் இருப்பவர் உண்மையில் இராணுவ சபை அரசியல் குழுவின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் உமர் ஜெய்ன் அல் அப்தீன் ஆவார். அவரும் மற்ற இரண்டு இராணுவத் தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். மற்றொரு புகைப்படம் கென்யாவில் பிபிசி பத்திரிகையாளர் எடுத்தது ” எனக் கூறப்பட்டுள்ளது.

Twitter archive link

கென்யாவில் எடுக்கப்பட்ட முதியவரின் புகைப்படத்தை வைத்து சூடான் நாட்டின் இணை பாதுகாப்பு அமைச்சர் என மற்றொரு வதந்தியும் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், சூடான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என பரப்பப்படும் முதியவரின் புகைப்படம் கென்யாவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட முதியவரின் புகைப்படம் என்றும், இப்புகைப்படம் 2019-ல் பிபிசி பத்திரிகையாளரால் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader