சூடான் மாடல் கருமையானத் தோலுக்கான கின்னஸில் இடம் பிடித்தாரா ?

பரவிய செய்தி
சூடான் மாடல் நயாகிம் கேட்வெக், அரிதான கருப்பு அழகு. பூமியில் இதுவரை கண்டிராத இருண்ட தோலுக்கான கின்னஸ் புத்தகத்தில் அவர் நுழைகிறார். இது கருப்பு கல் அல்லது கிரானைட் குறித்த கலைப்படைப்பு அல்ல. உடல் எல்லாம் சதை மற்றும் இரத்தத்தால் ஆணவள், உண்மையானவள் & அவள் அழகானவள்.
மதிப்பீடு
விளக்கம்
சூடான் நாட்டைச் சேர்ந்த மாடல் நயாகிம் கேட்வெக் என்பவர் இருண்ட தோலுக்கான கின்னஸில் இடம்பிடித்து உள்ளார் என பரவும் பதிவை காண நேரிட்டது. இதே தகவல் இந்திய அளவில் பல மொழிகளிலும், சர்வதேச அளவிலும் பரவி இருக்கிறது என்பதை அறிய நேர்ந்தது. அப்புகைப்படத்தில் இருக்கும் பெண் யார், கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தாரா என ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
சூடான் மாடல் நயாகிம் கேட்வெக் எனத் தேடினால் அவரின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் குவிந்து உள்ளன. எனினும், பிரபல மாடல் நயாகிம் கேட்வெக் தன்னுடைய இருண்ட தோலுக்கான கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் என பரவும் தகவல் தவறானது. இப்படி பரவும் தகவலுக்கு கடந்த ஏப்ரல் மாதமே உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
🚨 Fake news alert 🚨
Guinness World Records does not monitor records for skin tone. https://t.co/lS17sUJdWm— GuinnessWorldRecords (@GWR) April 27, 2020
அதுமட்டுமின்றி, @iChopTweets எனும் ட்விட்டர் பக்கத்தில் சூடான் மாடல் நயாகிம் கேட்வெக் உடன் நடத்திய உரையாடலின் ஸ்க்ரீன்ஷார்ட் பகிரப்பட்டு உள்ளது. அதில், நயாகிம் கேட்வெக் வைரலாகும் தகவலை மறுத்து இருந்துள்ளார்.
I spoke to her too and couldn’t confirm the record. Apologies for the wrong information, nevertheless she deserves all the recognition. pic.twitter.com/yGQiIhJayx
— The DRS ™ (@iChopTweets) April 27, 2020
முடிவு :
நம் தேடலில், சூடான் மாடல் நயாகிம் கேட்வெக் பூமியில் இதுவரை கண்டிராத இருண்ட தோலுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் என பரவும் தகவல் தவறானது என அறிந்து கொள்ள முடிகிறது.