இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி காய்கறி விற்றாரா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
வருஷத்துக்கு ஒருநாள். இன்போசிஸ் ஓனர் திரு. நாராயண மூர்த்தி சாரோட மனைவி, திருமதி. சுதா நாராயண மூர்த்தி, தன்னோட ஈகோவை உடைக்கறதுக்காக. தன்னை யாருன்னு காட்டிக்காம, தெருவுல உக்காந்து காய்கறி விப்பாங்களாம். வாழ்க்கைப் பாடத்தை கத்துக்க. இவங்களைவிட மேலான ஒரு ஆசிரியர், நமக்கு கிடைப்பாங்களா ?
மதிப்பீடு
விளக்கம்
இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி ஈகோவை உடைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தன்னை யாரென்று அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தெருவில் காய்கறி விற்பனை செய்கிறார் எனக் கூறி காய்கறிகள் சூழ்ந்து இருக்க சுதா மூர்த்தி அமர்ந்து இருக்கும் புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
ஐஆர்எஸ் அலுவலரான சுரபி என்பவர் ட்விட்டரில் சுதா மூர்த்தியின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பல மொழிகளில் ட்விட்டர், முகநூல் உள்பட சமூக வலைதளங்களில் சுதா மூர்த்தி காய்கறி விற்பனை செய்வதாக கூறும் தகவல் சுற்றித் திரிகிறது. சில பதிவுகளில், சுதா மூர்த்தி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு வெளியே ஆண்டிற்கு ஒருமுறை காய்கறிகளை விற்பனை செய்வதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
எழுத்தாளரான சுதா மூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் கோவிலுக்கு வெளியே காய்கறி விற்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது. அவர் காய்கறி விற்பனை செய்யவில்லை, கோவிலுக்கு தன்னார்வ அடிப்படையில் தொண்டு சேவை செய்து வருகிறார். காய்கறிகள் சூழ்ந்து இருப்பதால் காய்கறியை விற்பனை செய்வதாக ஓர் கதையை உருவாக்கி பரப்பி வருகிறார்கள்.
2013-ம் ஆண் அக்டோபர் 27-ம் தேதி பெங்களுர் மிரர் செய்திக்கு சுதா மூர்த்தி அளித்த பேட்டி குறித்த செய்தியில், ” பெங்களுரின் ஜெயாநகரில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் வருகை தந்து அங்குள்ள சமையல் அறை உள்ளிட்ட பகுதியை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது, அலமாரியை சுத்தம் செய்தல், காய்கறிகளை நறுக்குவது, முற்றத்தை துடைப்பது போன்ற தொண்டு பணியில் ஈடுபடுவதாக ” கூறப்பட்டுள்ளது.
According to an article published in @BangaloreMirror in 2013, Sudha Murthy spends three days in a year, Doing Seva(selfless service) at the Raghavendra Swamy temple. She cleans the kitchen, rooms; washes utensils, chops vegetables among other chores. https://t.co/pOx8Tebrbs
— Surbhi (@surbhig_) September 13, 2020
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.