This article is from Oct 06, 2018

சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம்: உண்மையா ?

பரவிய செய்தி

சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது என்று நாசாவின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

ஓம் என்ற சப்தம் இந்து மதத்தில் ஆன்மீகம் சார்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையாக மக்கள் மனதில் பதிந்துள்ளது.  இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் , சமணம் என பல மதங்களில் அமைதிக்கான ஒலியாகவும், கடவுளை வணங்கும் சொல்லாகவும் இருந்த ஓம் என்னும் மந்திர ஒலி சூரியனில் இருந்து வெளிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாசாவின் ஆராய்ச்சி அறிக்கையில் ஓம் எனும் சப்தம் வருவதாக  தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

ஷெபீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி : 

2010 ஆம் ஆண்டில் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் வானவியல் ஆராய்ச்சி துறையினர் சூரியனின் வெளிப்புற வளிமண்டப் பகுதியில் காந்த புலத்தால் உருவான அதிர்வலைகளை பதிவு செய்ய முயற்சித்தனர். சூரியனில் வரும் அந்த அதிர்வலைகள் இசைக் கருவியில் இருந்து வெளிவரும் சரங்களை போன்று ஒலியை எழுப்பியுள்ளன.

Youtube link | archived link

சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய அளவில் காந்த சுழல்கள் உருவாகின்றன. வளிமண்ட வெற்றிடத்தில் ஒலியை பதிவு செய்ய முடியாது என்பதால் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சப்தத்தை நேரடியாக பதிவு செய்ய முடியவில்லை. அதற்கு மாற்றாக, சூரியனின் வளிமண்டல மேற்பரப்பில் உருவாகும் மிகப்பெரிய காந்த புல சுழல்களை செயற்கைக்கோள் மூலம் புகைப்படமாக பதிவு செய்தனர்.

அதிர்வலைகளின் புகைப்படங்களை ஒலியாக மாற்றி பின் மனிதர்களுக்கு கேட்கும் விதத்தில் மாற்றி அமைத்தனர். சூரியனில் இருந்து வெளியாகும் ஒலியானது இசை கருவியின் சரங்களை போன்று உள்ளன. பதிவு செய்த ஒலியானது வீடியோவில் வெளியாகும் ஒலியை போன்றே இருக்கும் என்கிறார்கள்.

நாசா அறிக்கை : 

2013 ஆம் ஆண்டில் நாசா ஆராய்ச்சியால் வெளியிடப்பட்ட ” வாயேஜர் 1 ” என்ற அறிக்கையில், அக்டோபர் 2012 மற்றும் ஏப்ரல் 2013-ல் இரு ” interstellar plasma music ”  எனும் திடீர் எழுச்சி பதிவு செய்யப்பட்டது.

Facebook link | archived link

” நாசா வெளியிட்ட அறிக்கை மற்றும் ஷெபீல்ட் பல்கலைக்கழக குறிப்பிட்ட சூரியனின் வளிமண்டலப் பகுதியில் இருந்தும் வெளிவரும் மாதிரி ஒலி பதிவில் ஓம்(ஹம் அல்லது ஓஹ்ம் ) போன்ற சப்தம் வருவதாக எங்கும் குறிப்பிடவில்லை “. 

Link 

முதல் வீடியோவில் இருக்கும் ஆடியோவில் இசை கருவியின் சரங்களில் வரும் ஒலியைப் போன்று ஒரு இடத்தில் மட்டும் வருவதை கேட்க முடிகிறது. அதற்கு அடுத்ததோ அல்லது நாசா வெளியிட்ட ஆடியோ பதிவிலோ அவ்வாறான சப்தம் ஏதுமில்லை என்று தெளிவாக அறிய முடிகிறது.

இணையத்தில் பரவுவது போன்று ஓம் என்ற சப்தம் சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசா அறிக்கையில் கூட குறிப்பிடவில்லை என்பதே மெய்யான ஒன்று.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader