Fact Checkஅறிவியல்சமூக ஊடகம்

ஊடகங்களே போலிச் செய்தி.. சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக வதந்தி !

பரவிய செய்தி

சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து, அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும் புயலைப் போல் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் வட துருவத்தின் மேல் நெருப்பு சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்க, பூமிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட காட்சியை நாசா வெளியிட்டுள்ளது..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பெரிய பகுதி உடைந்ததாகக் கூறி பரபரப்பான செய்திகள் சர்வதேச அளவில் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. சூரியனின் ஒரு பகுதி உடைந்ததால், அதன் வடதுருவ பகுதிக்கு மேல் நெருப்பு சூறாவளி சுழன்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை நாசா வெளியிட்டு உள்ளதாகவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Archive link 

உண்மை என்ன ? 

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகப் பரவும் செய்திகள் குறித்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், சமீபத்தில் அவ்வாறான பதிவுகள் ஏதும் வெளியாகவில்லை.

அதேபோல், நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் இணையதளத்தில் தேடுகையில், சூரியன் தொடர்பான காட்சிகள், புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கேலக்சிகளை (Galaxies) கண்டறியப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பயன்படுத்தப்படுவதில்லை.

வைரல் செய்யப்படும் வீடியோவை முதன் முதலில் 2023 பிப்ரவரி 2ம் தேதி வானிலை ஆராய்ச்சியாளர் தமிதா ஸ்கோவ் (Tamitha Skov) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 

துருவ சுழல்(polar vortex) குறித்த அவருடைய பதிவில், ” சூரியனின் வட பகுதியில் முக்கிய இழையில் இருந்து ஒரு பகுதி பிரிந்து, நட்சத்திரத்தின் துருவ சுழலில்(polar vortex) சுற்றி வருவதாகப் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் முக்கிய இழையில் இருந்து பிரிந்தது என்பதை Broke away எனக் குறிப்பிட்டு இருந்ததால், சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

அவரின் பதிவைத் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளில் வெளியானதை அடுத்து, பிப்ரவரி 10ம் தேதி தமிதா ஸ்கோவ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவின் நிலைத்தகவலில், ” சூரியனின் துருவ சுழல் பற்றிய பதிவு ஊடகங்களில் ” சூரியனில் ஒரு பகுதி உடைந்ததாக ” மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. ஆனால், இந்த மிகைப்படுத்தலை நம்ப வேண்டாம் ” எனப் பதிவிட்டு இருக்கிறார். 

தமிதா ஸ்கோவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சூரியனின் வீடியோ குறித்து தேடுகையில், பிப்ரவரி 2ம் தேதி நாசாவின் Solar Dynamics Observatory உடைய இணையதளத்தில் அவ்வீடியோ வெளியாகி இருக்கிறது. 2010ல் தொடங்கப்பட்ட SDO-ல் சூரியனின் செயல்பாடுகள் குறித்த தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. 

மேற்கொண்டு தேடுகையில், ஸ்பேஸ்.காம் எனும் இணையதளத்திற்கு கொலராடோவில் உள்ள வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் துணை இயக்குநரான ஸ்காட் மெக்கின்டோஸ் அளித்த தகவலில், இதுபோன்ற சுழலை தான் பார்த்ததே இல்லை என்றும், 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சூரிய சுழற்சியின் (solar cycle) போதும் சூரியனின் 55 டிகிரி அட்சரேகையில் (Latitude) விசித்திரமான நிகழ்வுகள் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

முடிவு : 

நம் தேடலில், சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு பகுதி உடைந்ததாகவும், அதை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button