ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் நிலவு வேகமாக சூரியனை கடக்கும் காட்சியா ?

பரவிய செய்தி
ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக கடக்கும் சந்திரன். சூரியனை ஐந்து வினாடிகளில் கடக்கிறது. இறைவனின் இயற்கையின் அற்புத படைப்பு.
மதிப்பீடு
விளக்கம்
ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் தோன்றிய முழு நிலவு 5 நொடிகளில் சூரியனைக் கடந்து செல்வதாக 36 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
மே 26-ம் தேதி முழு சந்திர கிரகணம் மற்றும் சூப்பர்மூன் என பூமியில் இரு வான நிகழ்வுகளை காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ” சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கையில் அதேநேரத்தில் முழு நிலவு இருக்கும் போது சூப்பர்மூன் நிகழ்வு ஏற்படுகிறது” என நாசா குறிப்பிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை கூறுகிறது.
ஆனால், மேற்காணும் வைரல் வீடியோவில் நிலவு மிகப் பெரியதாகவும், அதே நேரத்தில் அதிவேகத்தில் கடந்து செல்கிறது.
Many questions about this obvious CG/VFX animation. My only problem is that I haven’t found the artist yet. Does anyone know the source?
This clip reminds of this animation from 2013: https://t.co/OCbZaPcIVU https://t.co/XZu9Q1qG06— HoaxEye (@hoaxeye) May 26, 2021
வைரல் வீடியோ குறித்து தேடுகையில், Hoaxeye எனும் ட்விட்டர் பக்கத்தில் ” இந்த CG/VFX அனிமேசன் பற்றி பல கேள்விகள். எனது ஒரே பிரச்சனை என்னவென்றால், இன்னும் அந்த கலைஞரை கண்டுபிடிக்கவில்லை. யாருக்காவது ஆதாரம் தெரியுமா ? இந்த கிளிப் 2013 அனிமேஷனை நினைவூட்டுகிறது ” எனப் பதிவிடப்பட்டள்ளது.
இதைத் தொடர்ந்து பதிவிட்ட மற்றொரு ட்வீட் பதிவில், ” அந்த கலைஞர் கிடைத்தார். டிக்டாக்கில் அலெக்ஸி_என்எக்ஸ். சமீபத்தில் ஒரு வைரல் யுஎஃப்ஓ அனிமேஷனை உருவாக்கினார். எனவே, அவர்களின் மற்ற வீடியோக்களை சரிபார்க்க முடிவு செய்தேன் ” என டிக்டாக் பக்கத்தின் லிங்க் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தியாவில் டிக்டாக் தளம் தடை செய்யப்பட்ட காரணத்தினால் Aleksey உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்கையில், 4 நாட்களுக்கு முன்பாக tagged video-வில் வைரலாகும் வீடியோ இடம்பெற்று உள்ளது. அதில், Credit to Aleksey எனப் பதிவிட்டு உள்ளனர்.
அலெக்ஸி ஒரு CGI மற்றும் VFX கலைஞர் மற்றும் அவரது இன்ஸ்டா பக்கத்தின் சுயவிவரத்தில் இதை போன்ற பல படைப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக கடந்து செல்லும் நிலவு என பரப்பப்படும் வீடியோ காட்சி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவே, உண்மையானது அல்ல என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
Explained: Total lunar eclipse and supermoon – the two celestial events coinciding on May 26
https://www.instagram.com/aleksey__n/