This article is from Aug 12, 2021

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய உள்ளதாக வதந்தி !

பரவிய செய்தி

உச்ச நீதிமன்றத்தின் கிளை, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் … எல்லா புகழும் மோடி ஒருவருக்கே.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 3 முக்கிய நகரங்களில் அமைக்க உள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பதிவுகள் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் சுற்றி வருகிறது.

உண்மை என்ன ?

சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

Twitter link  

பத்திரிகை தகவல் பணியகம்(PIB) உடைய ட்விட்டர் பக்கத்தில், ” இத்தகைய கூற்று போலியானது. அத்தகைய முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை ” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

2019-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்றத்தை நான்கு பிராந்திய கிளைகளாக நிறுவ வேண்டும் என்கிற யோசனையை பரிந்துரைத்து இருந்தார். இந்த யோசனை புதியவையும் அல்ல, சட்ட ஆணையம் தவிர, இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையிலும் அவர்கள் முன்மொழிந்தனர். ஆனால், அந்த யோசனை தீவிரமான விவாதமானவும் உருவாகவில்லை. உச்ச நீதிமன்றமே இந்த யோசனைகளை எதிர்க்கிறது ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்பட போவதாக பரவும் தகவல் வதந்தியே. இந்திய அரசின் தரப்பில் அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மாறாக, மறுத்த தகவலே வெளியாகி இருக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader