This article is from Nov 26, 2018

அதிகாரிகளின் தவறைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை : உச்ச நீதிமன்றம்.

பரவிய செய்தி

பேஸ்புக்கில் அரசையோ, அரசு அதிகாரிகளின் தவறையோ சுட்டிக்காட்டுவது தவறல்ல. உச்ச நீதிமன்றம் அதிரடி.

மதிப்பீடு

சுருக்கம்

கர்நாடகாவில் விபத்து பற்றிய விசாரணையில் தவறாக நடந்து கொண்ட காவலர்கள் பற்றி பெங்களூர் போக்குவரத்து காவலர்களின் முகநூல் பக்கத்தில் விமர்சித்த தம்பதிகள் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தவறான பிரிவிவுகளை பயன்படுத்தி மிரட்டும் குணத்துடன் அதிகாரிகள் இருப்பதாக தீர்ப்பு வழங்கி இருந்தது. (2015) 7 SSC 423 என்பது வழக்கு தொடர்பான எண்ணாகும்.

விளக்கம்

சமூக வலைத்தளத்தில் அரசின் அல்லது அதிகாரிகளின் தவறை சுட்டிக்காட்டுவது தவறு இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற பதிவுகள் வருவதை பார்க்கலாம். அதிகாரிகளின் தவறைச் சுட்டிக்காட்டுவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் பதிலானது 2015-ல் நடைபெற்ற வழக்கில் அளிக்கப்பட்டது.

வழக்கின் தொடக்கம் :

கர்நாடகாவில் மாணிக் தனேஜா மற்றும் அவரது மனைவி சாக்சி ஜாவ் சென்ற கார், ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் காயமடைந்தார். இதில், உரிய இழப்பீடு வழங்குவதாக மாணிக் தனேஜா கூறியுள்ளார்.

விபத்து தொடர்பாக புலகேசி நகர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சென்ற போது அவரது மனைவியிடம் போலீஸ் தவறாக நடந்து கொண்டதாகவும், துன்புறுத்தியதாகவும் செய்திகளில் இடம்பெற்று உள்ளது.

இதையடுத்து, தம்பதிகள் இருவரும் தங்களின் கோபத்தை பெங்களூர் ட்ராபிக் போலீஸ் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதோடு, இது குறித்த புகாரை காவல்துறைக்கு ஈமெயில் செய்து உள்ளனர்.

ஆனால், ஜூன் 14, 2013-ல் போலீஸ் முகநூல் பக்கத்தில் கடுமையாக பதிவிட்டதற்கு அவர்களின் மீது குற்ற வழக்கை பதிவு செய்தது காவல்துறை. அரசு ஊழியர்களை பணி செய்ய இடையூறாக இருந்த குற்றத்திற்கு (IPC 353) மற்றும் அச்சுறுத்தியக் குற்றத்திற்கு(IPC 506) என வழக்கு பதிந்தனர்.

இந்த விவகாரத்தில் தம்பதியருக்கு உரிய நிவாரணம் அளிக்காமல் மாணிக் தனேஜா தம்பதியினரின் வழக்கை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். (2015) 7 SSC 423 என்பது வழக்கு தொடர்பான எண்ணாகும்.

உச்ச நீதிமன்றம் :

உச்ச நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பில், “ சமூக வலைத்தளங்களில் தவறாக கருத்துக் கூறுபவர்களுக்கு கைது மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை என பரிந்துரைக்கும் Section 66A information technology Act 2000 “ – என்பது அதிகாரிகள் மிரட்டும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது “ எனக் கூறியது.

தம்பதியினர் முகநூலில் கமெண்ட் செய்ததால் தொடுக்கப்பட்ட வழக்கு பிரிவுகள் IPC 353 &IPC 506 பொருந்தாத ஒன்று என்றும், ஆகையால் தான் உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததாகத் தெரிவித்து உள்ளனர்.

Section 66A information technology Act 2000-ஐ பயன்படுத்தி இணையத்தில் கருத்து தெரிவிக்கும் மக்கள் மீது அதிகளவில் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாகக் கூறி கடுமையாக விமர்சித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.

அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறைச் சுட்டிக்காட்டுவது தவறு இல்லை. ஆனால், கடுமையாக வார்த்தைகள் மற்றும் எல்லைத் தாண்டிய வார்த்தைகளின் போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வர் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader