சூரத் பேருந்து விபத்து தொடர்பான பழைய வீடியோவை மதரீதியாகப் பரப்பும் வலதுசாரிகள் !

பரவிய செய்தி

பஸ் உடைப்பது சொத்தை எரிப்பது இவர்களின் DNA வில் கலந்து உள்ளது.

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சிவப்பு நிற அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடியை முஸ்லீம் நபர் ஒருவர் கல்லால் தாக்குவது போன்ற 6 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் பதிவுகளில் “பஸ்ஸை உடைப்பது, சொத்தை எரிப்பது, இவர்களின் DNA வில் கலந்து உள்ளது போல” என்று குறிப்பிட்டு வலதுசாரிகள் பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2019 இல் இருந்தே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (Citizenship Amendment Bill) எதிராக முஸ்லீம்கள் கலவரம் செய்வதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.

கடந்த 2017, ஜனவரி 28 அன்று குஜராத்தி செய்தி ஊடகமான News4india India என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி சூரத்:- உதானாவில் உள்ள பிஆர்டிஎஸ் சாலையில் நடந்து சென்றவர் மீது பேருந்து ஓட்டுநர் மோதியதில் விபத்து என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த வீடியோவின் விளக்கத்திலும், “சூரத்தின் உதானாவில் உள்ள சத்யாநகர் BRTS சாலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. பாதசாரி பலத்த காயம் காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மக்கள் பேருந்து மீது கற்களை வீசினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வீடியோல் சரியாக 30 வது நொடியில், முஸ்லீம் ஒருவரைத் தவிர இன்னும் சிலரும் பேருந்தின் மீது கற்களை எறிவதையும் பார்க்க முடிகிறது.  இதன் மூலம் கடந்த 2017 ஜனவரியில் சூரத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதசாரி மீது ஏற்படுத்திய விபத்து காரணமாக பொதுமக்கள் கற்களை வீசி பேருந்தை தாக்கும் வீடியோவை, மதரீதியாக சிலர் கடந்த 2019 இல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: வெறுப்புணர்வின் உச்சம், “அயோத்தி கோவிலில் குண்டு வெடிப்பு” என முஸ்லீம்கள் பெயரில் மிரட்டல் விடுத்துள்ள இளைஞர்கள் !

மேலும் படிக்க: முஸ்லீம் வியாபாரி ஜூசில் எச்சில் துப்பிக் கொடுப்பதாகத் தவறாகப் பரவும் சித்தரிப்பு வீடியோ !

முடிவு:

நம் தேடலில், அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடியை முஸ்லீம் ஒருவர் கல்லால் தாக்குவதுவதாக பரவும் வீடியோ, 2017ல் சூரத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பாதசாரி மீது ஏற்படுத்திய விபத்து காரணமாக பொதுமக்கள் கற்களை வீசி பேருந்தை தாக்கும் வீடியோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader