சுவிஸ் வங்கியில் இருப்பது கருப்புப் பணம் இல்லை – அமைச்சர் கணக்கு

பரவிய செய்தி
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கல் கடந்த ஆண்டில் 34 சதவீதம் குறைந்து உள்ளது. 2013-ம் ஆண்டில் இருந்து 80% குறைந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்து உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்கள் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. ஆனால், சென்ற ஆண்டில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 50% அதிகரித்து உள்ளது என்று வெளியான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம்
2014-ல் ஆட்சியை பிடித்த பிறகு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கருப்பு பணம் மீட்கப்படும் என்றும் மத்தியில் ஆளும் அரசு வாக்குறுதி அளித்தனர்.
சமீபத்தில், கருப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையால் கடந்த 3 ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கல் குறைந்து வந்ததாகவும், ஆனால், 2017-ம் ஆண்டில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் உயர்ந்து ரூ.7000 டெபொசிட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சுவிஸ் வங்கியின் புள்ளி விவர தகவல்கள் இவ்வாறு தெரிவிப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது சம்பந்தமாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் கருப்பு பணம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
“ சுவிஸ் வங்கியில் டெபொசிட் செய்யப்படும் கருப்பு பணம் பதுக்கல் பற்றிய தகவல் அனைத்தும் சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின்(BIS) உள்ளூர் வங்கியியல் புள்ளி விவரம் தான் நம்பத்தகுந்தவை என்றும், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளி விவரங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறான தலைப்புடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் வங்கியின் அதிகாரிகள் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார் “
இதுமட்டுமின்றி, “ சுவிஸ் வங்கியில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 34% சரிவை கண்டு உள்ளது. 2013 முதல் 2017-ம் ஆண்டு வரையில் 80% குறைந்து உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார் ”.
BIS தரவுகளில் இருந்து தனிப்பட்ட, கார்பரேட் டெபொசிட், வங்கிகளுக்கு இடையேயான பணப்பரிமாற்றம் 34.5% குறைந்து உள்ளது. 2016-ல் USD 800 மில்லியனில் இருந்து 2017-ல் USD 524 மில்லியன் ஆக குறைந்து உள்ளதாக கூறியுள்ளார். சுவிஸ் வங்கியில் கருப்பு பண பதுக்கல் மத்திய அரசின் நடவடிக்கையால் சரிவை நோக்கியே செல்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.
சென்ற 2017-ல் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடுகள் செய்தால் அது கருப்பு பணமாக அறிவிக்கப்படும் என்றும், இரு நாடுகளும் வங்கி தொடர்பான விவரங்களை 2019 முதல் பகிர்ந்து கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது.
சுவிஸ் வங்கியில் பணம் இருந்தால் அது கருப்பு பணமே என்று அனைவரும் எண்ணுகின்றனர் என்றும், சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து இருந்தார். தற்போது சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 80% குறைந்து உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். அப்போ ! வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணம் மீட்கப்படும் என்று ஏமாற்றம் அடைந்தது மக்கள் தானா.