சுவிஸ் வீராங்கனை ஆம்ப்ரீ இந்தியா வர மறுக்க காரணம் என்ன ?

பரவிய செய்தி

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்பதால் இந்தியாவில் நடக்க உள்ள உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் தொடரில் சுவிஸ் வீராங்கனை ஆம்ப்ரீ பங்கேற்க மறுப்பு.

மதிப்பீடு

சுருக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனை இந்திய வர மறுப்பு தெரிவிக்கப்பட்டதற்கு தவறான காரணங்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக ஆம்ப்ரீ பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

விளக்கம்

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்த ஆய்வை தாம்சன் ரியூட்டர்ஸ் என்ற தனியார் அமைப்பு நடத்தி வெளியிட்ட பட்டியலில் இந்தியா இடம்பெற்றது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அதிகம் நிகழ்வதாக இந்த ஆய்வு கூறினாலும், ஆய்வானது குறைவான எண்ணிக்கை கொண்டவர்களிடம் மட்டுமே நிகழ்ந்தது. எனினும், இந்த ஆய்வானது பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், இந்தியாவின் சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் தொடரானது நடந்து வருகிறது. இதில், விளையாட தேர்வாகிய சுவிட்சர்லாந்து நாட்டின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையான ஆம்ப்ரீ அலின்க்ஸ் (16 ) தரப்பில் வர மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் அதிகம் நிகழ்கிறது என்று இணையத்தில், ஊடகத்தில் வெளியான செய்திகளால் ஆம்ப்ரீ-யாவை இந்தியா அனுப்ப பெற்றோர் மறுத்துள்ளதாக ஆம்ப்ரீயாவின் பயிற்சியாளர் பாஸ்கல் தெரிவித்துள்ளார் என்று கூறி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா வர மறுக்க காரணம் :

ஆம்ப்ரீ அலின்க்ஸ் பற்றி ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வைரலாகிய பின்பு இந்திய செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காரணம் பற்றி அவரின் பெற்றோர் இகோர் மற்றும் வலேரி விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement

பெற்றோர்கள் ஆகிய நாங்கள் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கவலைப்படவில்லை. இது பொய் அல்லது ஊடக கண்டுபிடிப்பு.

ஜூலை மாதத்தில் குடும்பத்துடன் கோடைக்கால சுற்றுலா செல்ல முன்பே தீர்மானித்து இருந்தோம். ஆக, இந்தியா வர மறுத்தற்கு பாதுகாப்பு சம்பந்தமான காரணம் இல்லை. ஆம்ப்ரீ எகிப்து, மொராக்கோ, மெக்ஸிகோ, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் விளையாடி உள்ளார். ஆகையால், இந்தியா செல்வது ஆபத்தாக இருக்கும் என கருதவில்லை.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே ஆம்ப்ரீ இந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்து விட்டோம். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

 16 வயதே ஆன ஆம்ப்ரீ அலின்க்ஸ்க்கு இது போன்ற எண்ணற்ற போட்டிகளில் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆகையால், உடல்ரீதியாக அழுத்தம் தர விருப்பம் இல்லை “

“ நீண்ட காலமாக நாங்கள் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சரியான தருணம் இது என்று நினைத்தோம்”

இவ்வாறு காரணங்களை தெரிவித்த ஆம்ப்ரீ அலின்க்ஸ் பெற்றோர், தங்கள் மகள் பற்றி தவறான செய்திகள் வருவதை நினைத்து வருந்துவதாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ISA Courts  மற்றும் Express Avenue mall பகுதிகளில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button