சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹார்ன் மலையில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி !

பரவிய செய்தி
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்பதற்கு அடையாளமாக நம் தேசியக்கொடி Switzerland-ல் Alps மலைத்தொடரில் உள்ள Matterhorn மலையில் முப்பரிமாண வடிவில் ஒளிரூட்டப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து இந்தியர்களுக்கு ” நம்பிக்கையையும் வலிமையையும் ” வழங்குவதற்கு சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸில் உள்ள புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் மலையில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை முப்பரிமாண வடிவில் ஒளிரூட்டி உள்ளனர்.
ஏப்ரல் 18-ம் தேதி Zermatt Matterhorn மலையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் மலையில் இந்திய மூவர்ணக் கொடி ஒளிரூட்டப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுவிஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டு உள்ளது.
The world is fighting COVID-19 together.
Humanity will surely overcome this pandemic. https://t.co/7Kgwp1TU6A
— Narendra Modi (@narendramodi) April 18, 2020
சுவிஸ் நாட்டின் லைட் ஆர்ட்டிஸ்ட் ஜெர்ரி ஹோஃப்ஸ்டெட்டர் சுவிட்சர்லாந்திற்கும், இத்தாலிக்கும் இடையில் 4,478 மீட்டர் மலைச் சிகரத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகள் மற்றும் நம்பிக்கைச் செய்தியை கொண்டு ஒளிரச் செய்து வருகிறார். அவை பார்ப்பதற்கு கண்கவர் காட்சியாக அமைந்து வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.