This article is from Oct 01, 2018

சிரியா அகதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கனடா பிரதமர்.

பரவிய செய்தி

சிரியாவில் இருந்து குடிபெயரும் மக்களுக்கு ஆதரவு தருகிறார் கனடா பிரதமர்!!

மதிப்பீடு

சுருக்கம்

உள்நாட்டுப் போரின் விளைவால் பாதிக்கப்படும் சிரிய மக்கள் குடிபெயர்ந்து வாழ்வதற்கு பல ஆண்டுகளாக கனடா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

விளக்கம்

சிரியாவின் மண்ணில் அல் அஸாத்தின் அரசு ஆதரவு படைகளும், கிளர்ச்சியாளர்களின் படைகளும் எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த வாரம் கிழக்கு கௌட்டா நகரில் அரசு ஆதரவு படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆவேசமாக நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறு குழந்தைகள்.

சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தம் மற்றும் உணவு, மருத்துவ நிவாரணம் வழங்குவது குறித்த தீர்மானம் ஐ.நாவின் பாதுகாப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சிரியா போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சிரியாவில் இருந்து குடிபெயரும் மக்களுக்கு ஆதரவு தருவதாக கனடா பிரதமர் அறிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. ஆனால், சிரியா மக்களுக்கு பல ஆண்டுகளாக கனடா தேசம் அடைக்கலம் அளித்து வருகிறது.

கனடா தேசம் நீண்ட காலமாகவே குடிபெயர்ந்து வரும் அகதிகளுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. கனடாவின் வரலாற்றில் உலக மக்களுக்கு உதவிய பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. 1950 -ம் ஆண்டில் ஹங்கேரியன் அகதிகளும், 1970-ல் இஸ்மாயிலி முஸ்லிம்கள், 1970 மற்றும் 1980-களில் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தப்பி வந்த அகதிகளுக்கு ஆதரவு கொடுத்தனர். அதேபோல் ஈழப் போரின் போது அகதிகளாக சென்ற தமிழ் மக்களுக்கு கனடா தேசம் ஆதரவு அளித்து, தற்போது அவர்கள் கனடா நாட்டின் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர்.  

justin canada pm

பல ஆண்டுகளாகவே சிரியாவில் இருந்து குடிபெயர்ந்து வரும் மக்களுக்கு உதவ அந்நாட்டு மக்களும், கனடா அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தயாராக இருந்து வருகின்றனர். குறிப்பாக 2015-ல் ஜஸ்டின் ட்ரூடே கனடாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு அகதிகளுக்காக கனடா தேசத்தின் கதவுகள் திறக்கபட்டன. அந்நேரத்தில், 50,000 சிரிய அகதிகளுக்கு ஆளும் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ஆதரவு அளிப்பதாக கூறினர். அதன்படி டிசம்பர் மாதத்தில் 20,000 சிரிய மக்களுக்கு நல உதவிகள் செய்ய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

கனடா நாட்டின் இத்தகைய முயற்சியால் ஜனவரி 29, 2017-ன் தகவல்களின்படி 40,081 சிரிய அகதிகள் மறுகுடியேற்றம் அடைந்துள்ளனர். 

பிப்ரவரி 26, 2018-ல் கனடாவின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ சிரியாவில் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்த போர் நிறுத்தத்தை விரைவில் அறிவிக்க வேண்டும். சிரியா அரசும், அவர்களின் ரஷ்ய மற்றும் ஈரான் ஆதரவு படைகளும் நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு கனடா கண்டனம் தெரிவிக்கிறது.  கிழக்கு கௌட்டாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிவதற்கு கனடா நிதியுதவி வழங்கி, உயிர்களை காப்பாற்ற தேவையான அனைத்து உதவிகளையும் புரிவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 2018-ல் International Organization for Migration, போரினால் பாதிக்கபட்டு சிரியா நாட்டிலும், மற்ற நாடுகளிலும் உள்ள சிரியா  மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு 193 மில்லியன் தேவை என்று மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதிகள், குழந்தைகளுக்கு படிப்பு என அனைத்தும் வழங்க உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் மக்களுக்கு உதவ உலகின் பல நாடுகள் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader