163 சிரிய அகதிகளை விமானம் மூலம் கனடாவிற்கு அழைத்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ.

பரவிய செய்தி

கனடா நாட்டு இராணுவ விமானங்கள் சிரியாவிற்கு சென்று அங்குள்ள 163 சிரிய மக்களை அழைத்து வந்துள்ளது. மேலும், 25,000 சிரிய அகதிகளை ஏற்றுக்கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்திரவாதம் அளித்துள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

2015-ல் சிரியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 163 சிரிய அகதிகளை கனடா பிரதமர் நேரில் சென்று வரவேற்றார். இதை தற்போது நடைபெற்றதாக தவறாக நினைத்துள்ளனர்.

விளக்கம்

சில வாரங்களாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என எங்கு பார்த்தாலும் சிரியா நாட்டின் போரைப் பற்றி தான் பேசப்படுகிறது. எனினும், உண்மை செய்திகளும், போலியான தகவல்களும் கலந்தே தான் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அதில், அதிகம் இடம்பெறுவது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பற்றியதாக இருக்கும்.

சிரியாவிற்கும் கனடா பிரதமருக்கும் என்ன சம்பந்தம்..? அவரை பற்றி மட்டுமே அதிகம் பேசுவது ஏன் ? என்ற கேள்விகள் பலரது மனதில் இருக்கும்.

Advertisement

அதற்கு காரணம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்ற பிறகு அகதிகளுக்காக கனடா தேசத்தின் கதவுகள் திறந்தே இருக்கும்படி 2015-ல் உத்தரவுகளை பிறப்பித்தார். அன்றிலிருந்து அகதிகளுக்கு நேசத்துடன் அடைக்கலம் அளிக்கும் தேசமாக கனடா இருந்து வருகிறது.

2018 பிப்ரவரி மாதம் சிரியாவின் போருக்கு பிறகு, கனடா நாட்டு இராணுவ விமானங்கள் சிரியாவிற்கு சென்று அங்குள்ள 163 சிரிய மக்களை அழைத்து வந்துள்ளது என்று செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவிய வண்ணம் உள்ளது. இத்தகவலை பொய் என்று கூறி விட இயலாது! ஆனால், இந்நிகழ்வு 2015-ல் நடைபெற்றது என்ற உண்மையையும் கூற வேண்டும்.

2015-ம் ஆண்டு டிசம்பரில் சிரியாவில் இருந்து 163 சிரிய மக்களை கொண்ட விமானம் டொரோண்டோ விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. நாட்டிற்கு புதிதாக வரும் மக்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார். களைப்படைந்து வந்த சிரிய அகதிகளை பார்த்து கனடா பிரதமர் முதலில் கூறிய வார்த்தை “ நீங்கள் பாதுகாப்பான வீட்டில் உள்ளீர்கள் ” என்பது தான். அதன் பின் குழந்தைகளுக்கு குளிரை தாங்கி கொள்ளும் ஆடைகளை வழங்கினார். 

Advertisement

“ இன்றைய அற்புதமான இரவில் புதிய கனேடிய மக்கள் விமானத்தில் கனடாவிற்கு வந்துள்ளனர். கனடா அனைத்து மக்களும் உள்ள தேசம், அன்பை வெளிப்படுத்துவதையும் மற்றும் வரவேற்பதையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நாம் உலகத்திற்கு அன்பின் மூலம் வெளிபடுத்த வேண்டும் ” என்று கனடா பிரதமர் மக்கள் மத்தியில் கூறினார்.

2015-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சிரியா நாட்டில் இருந்து 163 சிரிய அகதிகளை அழைத்து வந்தனர். இவர்களுக்கு இருப்பிடம், கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 28,000 டாலர்கள் வழங்குவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தது. 2016 பிப்ரவரி இறுதிக்குள் குறைந்தது 25,000 சிரிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கனடா அரசு அறிவித்தது.

செய்தி உண்மை என்றாலும் நிகழ்ந்த காலம் வேறு. எனினும், மற்ற நாட்டு மக்களையும் தம் மக்கள் போல் நினைக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close