மாத்திரை வடிவில் டிஷ்சு பேப்பர்..!

பரவிய செய்தி
மாத்திரை போல் உள்ள துணி. பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் மாத்திரை சாப்பிடும் முன் அது மாத்திரையா இல்லையா என்று கவனிங்கள். மருத்துவர் பரிந்துரை செய்த பிறகு சாப்பிடவும் எச்சரிக்கை எதிலும் ?
மதிப்பீடு
விளக்கம்
முகத்தை துடைக்க உதவும் டிஷ்சு பேப்பர் என்ற துணியை மாத்திரை வடிவில் சிறிதாக்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். இதை மாத்திரையில் சாப்பிடும் போது அபாயம் இருப்பதாக அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள்.
வெள்ளை நிறத்தில் உருளை வடிவில் பார்ப்பதற்கு மாத்திரை போன்று டிஷ்சு பேப்பரை சிறிதாக்கி வைத்துள்ளனர். 10 மாத்திரைகள் கொண்ட பாக்கெட் மற்றும் தனியாக மிட்டாய் போன்ற சிறிய பாக்கெட்களிலும் இவை வைக்கப்பட்டுள்ளன. இவ்வகை டிஷ்சு பேப்பர் 1 செ.மீ அளவிற்கு உருளை வடிவில் இருக்கும். டிஸ்சு பேப்பர் மட்டுமின்றி towel போன்று நீளமாகவும் கூட துணிகளை சிறிதாக்கி வைத்துள்ளனர்.
” JERN என்ற நிறுவனத்தால் ஆன்லைன் மூலம் விற்கப்படும் இந்த வகை டிஷ்சு பேப்பர்கள் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளன. தரத்திற்கு ஏற்ப அதன் விலையும் அதிகம். 100 எண்ணிக்கை கொண்ட டிஷ்சு பேப்பர்கள் 10 முதல் 14 டாலர்கள் வரை விற்கப்படுகிறது. பல நிறுவனங்கள் இந்த டிஸ்சு பேப்பர் விற்பனையில் போட்டி போட்டுக் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளன “.
சாதாரண மக்கள் இவற்றை பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் இதைப் பற்றி மக்களே வீடியோ பதிவு மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.
சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக யாராவது பயன்படுத்தி அதை மிட்டாய் என சிறு குழந்தைகள் சாப்பிட வாய்ப்புகள் உள்ளன. எனினும் அதனை வைத்து மாத்திரைக்கு பதில் துணியை வைத்து விற்கிறார்கள் என்பது போல் தேவை இல்லாத பதற்றத்தை உண்டாக்குவது சரி அல்ல..!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.