தப்ரீஸ் அன்சாரி உயிருடன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி

ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி அடிச்சே கொன்று விட்டதாக புரளியை கிளப்புறாங்கள் !

மதிப்பீடு

சுருக்கம்

தப்ரீஸ் அன்சாரியை கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நடந்த பிறகு அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து உள்ளனர். எனினும், ஜம்ஷெத்பூரில் உள்ள டாடா மெயின் மருத்துவமனையில் அன்சாரி இறந்து உள்ளார்.

விளக்கம்

ஜார்கண்ட் மாநிலத்தில் செராய்கீலா கார்ஸவான்(Seraikela kharsawan) மாவட்டத்தில் உள்ள தாட்கிதி கிராமத்தில் ஜூன் 18-ம் தேதியன்று தப்ரீஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞரை திருட வந்ததாகக் கூறி மரத்தில் கட்டி வைத்து ” ஜெய் ஸ்ரீராம் ” , ” ஜெய் ஹனுமான் ” எனக் கூற சொல்லி தாக்கிய சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக கூறி தாக்கப்பட்ட இளைஞரை காவல்துறையிடம் உயிருடன் ஒப்படைத்ததாக ஓர் புகைப்படம் தமிழக சமூக வலைதளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அப்படத்தில் இருப்பது தப்ரீஸ் அன்சாரி தானா என ஆராய்ந்து பார்க்கும் பொழுது, காவல்துறையின் கட்டுப்பாட்டில் தப்ரீஸ் அன்சாரி இருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமே இது. இப்படமானது timesheadline உள்ளிட்ட சில தளங்களில் இடம்பெற்று உள்ளது.

தப்ரீஸ் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தப்ரீஸை கைது செய்தனர். கமல் மஹாடோ என்பவர் தன்னுடைய வீட்டில் தப்ரீஸ் உள்ளிட்ட மேலும் இருவர் திருட வந்தனர் என அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். தப்ரீஸை திருடன் என பிடித்த நேரத்தில் உடன் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.

கைது செய்து இருந்தாலும் சதார் மருத்துவமனையில் தப்ரீஸ் அன்சாரி அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் அங்கிருந்து ஜம்ஷெத்பூரில் உள்ள டாடா மெயின் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், தப்ரீஸ் அன்சாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Advertisement

புதிதாக திருமணம் நடந்த நிலையில் தப்ரீஸ் அன்சாரியின் மனைவி கூறுகையில், என் கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஆனால், காவல்துறை சரியான சிகிச்சைக்கு அளிக்காத காரணத்தினால் இறந்து உள்ளார் ” எனக் கூறி இருந்தார். மேலும், தன் கணவரை தாக்கிய பலரின் மீது புகாரும் அளித்து இருந்தார். இதையடுத்து, முக்கிய குற்றவாளியாக பப்பு மண்டல் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தப்ரீஸ் அன்சாரி மோட்டார் சைக்கிளை திருட வந்ததாக கூறி மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் பலமான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. தப்ரீஸை உயிருடன் இருக்கும் பொழுதே காவல்துறை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார்.

” ஜெய் ஸ்ரீராம் ” என கூற சொல்லி தாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் உள்ளன. இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே மும்பை தானேவில் கேப் ட்ரைவர் உஸ்மான் கான் என்பவரை ” ஜெய் ஸ்ரீராம் ” எனக் கூற சொல்லி ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button