முதல்வர் ஸ்டாலின் தாம்பரம் மேயரின் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ எனப் பெயர் சூட்டியதாகப் பரவும் போலிச் செய்தி

பரவிய செய்தி

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ‘திராவிட மாடல் “ என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் அவர்களின் குழந்தைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ” திராவிட மாடல்” எனப் பெயர் சூட்டியதாக ஏபிபி நாடு சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Archive link 

உண்மை என்ன ? 

டிசம்பர் 27ம் தேதி தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது தாம்பரம் மாநகராட்சி வசந்தகுமாரி கமலக்கண்ணன் கைக் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது அவரின் குழந்தைக்கு ” திராவிட அரசன் ” எனப் பெயர் சூட்டியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடிய போது, டிசம்பர் 27ம் தேதி ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டில், ” தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு திராவிட அரசன் என பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” என்றே வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link 

ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டில், ” திராவிட அரசன் “ என இடம்பெற்ற இடத்தில் ” திராவிட மாடல் “ எனப் பெயரை மாற்றி எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா ?

மேலும் படிக்க : முதலமைச்சருக்கு 70 வயது அவரது ஆசிரியருக்கு 68 வயது எனப் பொய் பரப்பும் கிஷோர் கே சாமி !

இதற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவு பிறப்பித்ததாகவும், 70 வயதான முதல்வரின் ஆசிரியருக்கு 68 வயது தான் எனப் பொய்கள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ‘திராவிட மாடல் “ எனப் பெயர் சூட்டியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது. முதல்வர் ஸ்டாலின் மேயரின் குழந்தைக்கு திராவிட அரசன் என்றே பெயர் சூட்டி உள்ளார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader