தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவு குறித்து சாட்டை துரைமுருகன் சொன்ன பொய்!

பரவிய செய்தி

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி Attendance 42 சதவீதமாக உள்ளது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் வருகை மிக மிகக் குறைவு. – சாட்டை துரைமுருகன் (நாதக)

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரத்தில் பேசும் போது தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்குச் சென்ற உறுப்பினர்களின் Attendance சதவீதம் குறித்துப் பேசியுள்ளார்

அவர் “தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி Attendance 42 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களைவிட மிக மிகக் குறைவாக Attendance உள்ளவர் யார் என்றால், உங்களுடைய காரைக்குடி மண்ணின் மகன் மரியாதைக்குரிய ஐயா சிதம்பரத்திற்கு அவசியம் இல்லாமல் பிறந்த கார்த்தி சிதம்பரம்” என்று பேசியுள்ளார். 

உண்மை என்ன?

தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் 2019 தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 38 இடங்களில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்குச் சென்ற உறுப்பினர்களின் Attendance சதவீதம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அது தொடர்பான தரவுகளைத் தேடினோம். 

‘PRS Legislative Research’ தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தது, விவாதங்களில் கலந்து கொண்டது, அவர்கள் கொண்டுவந்த தனிநபர் மசோதா போன்ற தகவல்கள் உள்ளது. அதன்படி தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களில் சராசரி Attendance 74 சதவீதம். 

தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களின் Attendance தொடர்பாக ‘தி இந்து’ இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த கார்த்தி சிதம்பரத்தின் Attendance சதவீதத்தையும் பார்த்தோம். அவர், 77 சதவீதம் மக்களவைக்குச் சென்றுள்ளார். அப்படிச் சென்றதில் 24 விவாதங்களில் கலந்து கொண்டு 165 கேள்விகளைக் கேட்டுள்ளார். 

இவற்றில் இருந்து தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களின் Attendance சதவீதம் குறித்து சாட்டை துரைமுருகன் சொன்னது தவறான தகவல் என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

மேலும் படிக்க : திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டு பெரியார் பேசியதாகச் சாட்டை துரைமுருகன் சொன்ன பொய் !

இதற்கு முன்னர் சாட்டை துரைமுருகன் சொன்ன பொய்யான தகவல்கள் பற்றிய உண்மைகள் யூடர்ன் தளத்தில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : கமல்ஹாசன் கர்நாடகாவைச் சேர்ந்தவர் எனப் பொய் பரப்பும் சாட்டை துரைமுருகன் !

முடிவு : 

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி Attendance 42 சதவீதம் என்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் சொன்ன தகவல் உண்மை அல்ல. தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களின் வருகைப்பதிவு சராசரி 74 சதவீதமாகும். 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader