தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏற வேண்டும் என பாஜக நாராயணன் திருப்பதி கூறினாரா ?

பரவிய செய்தி
தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை – நாராயணன் திருப்பதி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ” உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை ” எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும் என பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியதாக நியூஸ் 7 தமிழ் சமூக வலைதள பக்கங்களில் எந்த செய்தியும் இடம்பெறவில்லை. அது போலியாக எடிட் செய்யப்பட்ட செய்தி.
நாராயணன் திருப்பதி பற்றி பரவும் செய்தி குறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், ” இது போலியான செய்தி ” என பதில் அளித்தார்.
முடிவு :
நம் தேடலில், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை எனக் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.