This article is from Jul 19, 2021

தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சையென பாலிமர் செய்தி வெளியிட்டதா ?

பரவிய செய்தி

நான் ஒரு மிஷினரி கைகூலி. பாஜக நல்லதே செய்தாலும் எதிர்ப்பது மட்டுமே என் பணி.. பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து பரப்புவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை – தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஊடகவியலாளரும், தமிழ்கேள்வி யூடியூப் சேனலை நடத்தி வரும் செந்தில் வேல் அவர்கள், ” நான் ஒரு மிஷினரி கைகூலி. பாஜக நல்லதே செய்தாலும் மட்டுமே என் பணி.. பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து பரப்புவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை ” என பேட்டி அளித்ததாக பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை என பரப்பப்படும் பாலிமர் நியூஸ் கார்டில் எழுத்துப்பிழை இருப்பதை பார்க்க முடிந்தது. எனினும், ஜூலை 13-ம் தேதியிட்ட பாலிமர் நியூஸ் கார்டு குறித்து அதன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை.

ஜூலை 13-ம் தேதி நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான உயர்நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தியே வெளியாகி இருந்தது. வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் பாலிமர் சேனலின் வாட்டர் மார்க் இடம்பெறவில்லை என்பதை காணலாம். வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போதும் விஜய் தொடர்பான நியூஸ் கார்டே கிடைத்தது.

மேலும் படிக்க : உருமாறிய கொரோனா செய்திக்கு மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா ?

இதற்கு முன்பாக, செந்தில் வேல் பெயரில் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து பகிரப்பட்ட ட்விட் ஒன்றை வைரல் செய்தது தொடர்பாக நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் வெளியான போலி ட்வீடை பகிர்ந்த மாரிதாஸ் ரசிக பக்கம் !

முடிவு :

நம் தேடலில், தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை என பரப்பப்படும் பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டு என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader