தமிழ்நாட்டின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்ததாக அதிமுகவினர் பரப்பும் பொய் !

பரவிய செய்தி
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எல். ஜெயசுதா அவர்கள் நியமனம் ! இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிறுவிய கழகமாம் அஇஅதிமுக வசம் வந்துள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தரப்பில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை 75ல் இருந்து 82 ஆக உயர்த்தியும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்று(செப் 27) வெளியானது.
அதில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் எல்.ஜெயசுதா அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளரை அதிமுக நியமித்து உள்ளதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எல். ஜெயசுதா அவர்கள் நியமனம் !
இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிறுவிய கழகமாம் அஇஅதிமுக வசம் வந்துள்ளது..#AIADMK pic.twitter.com/CspfT4FyhM
— Voice of புரட்சி தமிழர் (@VoiceOfEPS) September 28, 2023
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எல். ஜெயசுதா அவர்கள் நியமனம் !
இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிறுவிய கழகமாம் அஇஅதிமுக வசம் வந்துள்ளது..#AIADMK… pic.twitter.com/cNwZxcT0k2
— (@Gokulraj0210) September 28, 2023
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் பெண் மாவட்டச் செயலாளர்கள் குறித்து தேடுகையில், 1999ல் நடந்த திமுகவின் உட்கட்சி தேர்தலில் கரூர் எம்எல்ஏவாக இருந்த வாசுகி முருகேசன் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 2009ம் ஆண்டு வரை மாவட்டச் செயலாளராக இருந்தார். 2009ல் கார் விபத்தில் உயிரிழந்தார்.
இதேபோல், கோவை திமுக மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்த பொங்கலூர் பழனிசாமியின் மனைவி விஜி பழனிசாமியும் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.
தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக உள்ள கீதா ஜீவன் அவர்கள் தூத்துக்குடி திமுகவின் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
இதேபோல், கடந்த ஜூலை மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக வேல். பழனியம்மா என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இப்படி அதிமுகவிற்கு முன்பாகவே திமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளில் பெண் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளதாக நியூஸ் 18 தமிழ் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுகவினர் பரப்பும் தகவல் தவறானது. இதற்கு முன்பாக, திமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளில் பெண் மாவட்டச் செயலாளகள்ர் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
ஆதாரம்
this-is-the-story-of-the-coimbatore-district-dmk
https://www.dmk.in/en/party/organizationals/district-secretaries/
vck-members-passed-a-resolution-against-the-woman-as-the-district-secretary-in-kallakurichi
two-posts-for-the-first-time-in-karur-district-dmk-supporters-of-minister-senthil-balaji-happy
eps-appoints-5-new-district-secretaries-in-admk-first-district-woman-secretary-appointed-