கேசவ விநாயகம் உள்பட பாஜகவினர் மது அருந்துவதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், செல்வகுமார் உள்பட பாஜகவினர் மது அருந்திக் கொண்டு அசைவ உணவை சாப்பிடுவதாக இப்புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாடு பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவரான செல்வகுமாரின் ட்விட்டர் பக்கத்தில், ” இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர் பாலாஜி, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது ” என உணவு அருந்தும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர் @balaji_utham, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது. pic.twitter.com/zne0vobwWo
— Selva Kumar (@Selvakumar_IN) February 27, 2023
பாஜகவின் கேசவ விநாயகம், கோவை மாவட்ட தலைவர் பாலாஜி, செல்வகுமார் ஆகியோர் உணவு அருந்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மது மற்றும் அசைவ உணவை வைத்து எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மது பாட்டில் எனப் பரப்பப்படும் வதந்தி !
மேலும் படிக்க : ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !
இதற்கு முன்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மது பாட்டில் இருப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மது அருந்துவதாகவும் தவறான மற்றும் எடிட் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. அதுகுறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், கேசவ விநாயகம் உள்பட தமிழ்நாடு பாஜகவினர் மது அருந்துவதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.