தலையில் கட்டுடன் வைரலான பாஜக பெண் நிர்வாகி இஸ்லாமியர் வேடத்தில் இருப்பதாக வதந்தி !
பரவிய செய்தி
அதே அம்மணி, இந்த முறை இஸ்லாமியர் வேஷம்.
மதிப்பீடு
விளக்கம்
2020 செப்டம்பர் மாதம் சுவர் விளம்பரம் பிரச்சனை காரணமாக திமுகவினருக்கு எதிராக தமிழக பாஜகவினர் கட்டுடன் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தவறாக ட்ரோல் செய்யப்பட்டது. தமிழக பாஜகவின் செயலாளர் சுமதி வெங்கடேஷ் தலையில், கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் தவறாக ட்ரோல் செய்யப்பட்டது. அதுகுறித்து நாம் விரிவானக் கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : வைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன ?
கடந்த ஆண்டு தலையில் கட்டுடன் இருந்த அதே பாஜக பெண் நிர்வாகி தற்போது இஸ்லாமிய பெண் வேடத்தில் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.
அதே அம்மணி, இந்த முறை இஸ்லாமியர் வேஷம். 🤭🤭🤭#நாடக_பிஜேபி pic.twitter.com/JRtlRM85Ss
— KING DMK 🖤❤️ ( திமுக அரசன் ) (@dmk_twitz) November 23, 2021
உண்மை என்ன ?
கடந்த ஆண்டு தலையில் கட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜகவின் செயலாளர் சுமதி வெங்கடேஷ் தற்போது இஸ்லாமிய பெண் வேடத்தில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது. உண்மையில், பரப்பப்படும் புகைப்படத்தில் இஸ்லாமிய பெண்ணிற்கு பின்னால் இருப்பவரே சுமதி வெங்கடேஷ்.
For the ensuing urban local body elections across 21 corporations, @BJP4TamilNadu prospective candidates have submitted their interest forms in huge no’s today!
From Doctors to autodrivers to common working class brothers & sisters, it was like a festival for them!
Thank you 🙏 pic.twitter.com/fZmY6RWzde
— K.Annamalai (@annamalai_k) November 21, 2021
நவம்பர் 21-ம் தேதி தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உடைய ட்விட்டர் பக்கத்தில், ” நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வருங்கால வேட்பாளர்கள் தங்களது விருப்பப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர் ” எனப் பதிவிட்ட பதிவில் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கடந்த ஆண்டு தலை, கையில் கட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வைரலான தமிழக பாஜக செயலாளர் சுமதி வெங்கடேஷ் இம்முறை இஸ்லாமிய பெண் வேடத்தில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படத்தில் இஸ்லாமிய பெண்ணிற்கு பின்னால் இருப்பவரே சுமதி வெங்கடேஷ் என அறிய முடிகிறது.