திமுக ஆட்சியில் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமா ?

பரவிய செய்தி
தமிழ்நாடு முதலிடம் கடன் வாங்கியதில் Credite goes to whom? #கடன் #தமிழ்நாடு #திமுகஅராஜகம்
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அளவில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 82,000 கோடி உடன் முதலிடம் பிடித்து உள்ளதாகவும், இது திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாகவும் தகவல் புகைப்படம் ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். கடந்த 2020-ல் ஜூலை 8-ம் தேதி வெளியான தி ஹிந்து செய்தியில், தமிழ்நாடு கடன் பெறும் மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
Which Indian states borrow the most? pic.twitter.com/JTEC1KW5JJ
— Finshots (@finshots) March 25, 2021
Advertisement
தற்போது பகிரப்படும் ஆய்வு தகவல் புகைப்படம் Finshots எனும் பெயரில் வெளியானது. அதை அடிப்படையாக வைத்து தேடுகையில், “2021 மார்ச் 25-ம் தேதி Finshots ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே இப்புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
2020 நிதியாண்டில் ரூ.82,000 கோடி கடன் வாங்கி இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.
தமிழ்நாட்டை விட அதிக மக்கள்தொகை – மாநில உற்பத்தி கொண்ட மகாராஷ்டிரம் 2ம் இடம். (ரூ.15000 கோடி குறைவு)
மக்கள் தலையில் கடன்சுமை ஏற்றிவிட்டு ’வெற்றிநடை’ எனும் அதிமுக கோமாளிகள் தமிழகத்தின் சாபக்கேடு! pic.twitter.com/q5xrzdS1Q3
— DMK IT WING (@DMKITwing) March 26, 2021
தமிழ்நாடு கடன் பெறும் மாநிலங்களில் முதலிடம் பிடித்து உள்ளதாக 2021 மார்ச் மாதம் வெளியான தகவல் குறித்து அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவினர் வாய் திறக்கவில்லை. ஆனால், இத்தகவல் வெளியான சமயத்தில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு கடன் பெறும் மாநிலங்களில் முதலிடம் பிடித்து உள்ளதாக பரவும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் தகவல் புகைப்படம் 2021 மார்ச் மாதம் அதிமுக ஆட்சியின் போது வெளியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.