தமிழ்நாட்டில் தரமற்ற மருத்துவர்கள் உருவாகியதாக ரமேஷ் போக்ரியால் கூறவில்லை !

பரவிய செய்தி

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று NEET-JEE தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற பத்தாண்டுகளில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள். தகுதி மற்றும் தரம் எல்லாவற்றையும் விட முக்கியம் – ரமேஷ் போக்ரியால்

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய அளவில் நீட் , ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு இந்த ஆண்டில் மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கைகள் வந்த வண்ணமே உள்ளன. எனினும், நீட் போன்ற தேர்வுகளை நடத்தும் நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது.

இந்நிலையில், ” மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று NEET-JEE தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற பத்தாண்டுகளில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள். தகுதி மற்றும் தரம் எல்லாவற்றையும் விட முக்கியம் ” என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷான்க் தெரிவித்ததாக மேற்காணும் கதிர் நியூஸ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேடிய போது, ” மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் தருவதாகவும், இந்திய உச்ச நீதிமன்றம் கூட முழு கல்வியாண்டும் வீணாகக் கூடாது எனக் கூறியுள்ளதாக ” கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அளித்த கருத்து ஆகஸ்ட் 26-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், நீட்  மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகளை எழுதாதக் காரணத்தினால் தமிழகத்தில் தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகியதாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை. அவ்வாறான செய்திகளும் வெளியாகவில்லை.

மேற்கொண்டு கதிர் நியூஸ் உடைய முகநூல் பக்கத்தை ஆராய்ந்து பார்க்கையில் அந்த நியூஸ் கார்டு பதிவு இடம்பெறவில்லை. அதை நீக்கி இருக்கலாம் எனத் தோன்றியது. பின்னர், தங்கள் பெயரில் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என பதிவிட்டு உள்ளார்கள்.

Facebook link | archive link 

முடிவு : 

நம் தேடலில், நீட்  மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகளை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தேசத்தில் தரமற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உருவாகி விடுவார்கள் என ரமேஷ் போக்ரியால் கூறவில்லை மற்றும் கதிர் நியூஸ் பக்கமும் அந்த நியூஸ் கார்டை போலி என பதிவிட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button