தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் பெண் ஒருவரைத் தாக்குவதாகப் பரவும் தெலங்கானா வீடியோ !

பரவிய செய்தி
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் . இவர் தான் கூட்டுறவு வருவாய் துறைக்கு வரவேண்டாம் என முதல்வரிடம் மனு அளித்தவர் . இது மக்களுக்கான திராவிட மாடல் அரசு
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் பெண்ணின் நெஞ்சில் மிதித்து தாக்கியதாகவும், இவர் தான் கூட்டுறவு வருவாய் துறைக்கு வர வேண்டாம் என முதல்வரிடம் மனு அளித்தவர் எனக் கூறி 6 நொடிகள் கொண்ட வீடியோவை உமா கார்கி உள்பட பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
என்ன நடக்கிறது நாட்டில்?.
இதுபோன்ற அரசியல் வியாபாரிகள் / அதிகாரிகள் பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் நடவடிக்கையை பாருங்கள்!
இவர் தான் கூட்டுறவு வருவாய் துறைக்கு வரவேண்டாம் என முதல்வரிடம் மனு அளித்தவர்!. pic.twitter.com/G7oNLg3X5e— Thangaraj Suriyavel 🚩 (@ithanagaraj) August 16, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், “ 2018 ஜூன் 17ம் தேதி ஸ்ரீனிவாஸ் கங்காபுத்ரா என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் டிஆர்எஸ் கட்சி நிஜாமாபாத் மாவட்ட பிரஜா பரிசத் தலைவர்(எம்பிபி) இம்மாடி கோபி பெண் ஒருவரை தாக்கியதாகக் ” கூறி இதே வீடியோ பதிவாகி இருக்கிறது.
TRS party nizamabad dist mudhiraj president dharpally mandal MPP immadi Gopi attacking on a Mother pic.twitter.com/pi7o55Ckdh
— Srinivas Gangaputhra (@SrinivasGangap1) June 17, 2018
மேற்கொண்டு தேடுகையில், 2018ம் தேதி வெளியான டெக்கன் குரோனிக்கல் செய்தியில், டிஆர்எஸ் எம்பிபி தலைவர் இம்மாடி கோபி பெண்ணின் நெஞ்சில் மிதித்து தாக்கியதாக புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள இந்தல்வாய் கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நிலத்தின் உரிமையாளர் தரப்பைச் சேர்ந்த பெண் கோபியை செருப்பால் அடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பெண்ணின் நெஞ்சில் கோபி உதைத்து உள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், இதைத் தொடர்ந்து கோபியை போலீசார் காவலில் எடுத்து உள்ளனர் என செய்தியில் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக இருந்த சண்முகராஜன் பணி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தலில் மயிலாடுதுறையைச் சேர்ந்த அமிர்தகுமார் என்பவர் தேர்வாகி உள்ளதாக 2023 ஜூன் 20ம் தேதி மாலை மலர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : திமுக அரசு புதிய பேருந்து வாங்க ரூ50 லட்சம், பழைய பேருந்தை புதுப்பிக்க ரூ 42 லட்சம் செலவிட்டதாகப் பரவும் பொய்
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன் பெண்ணின் நெஞ்சில் உதைத்து தாக்கியதாகப் பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல, தெலங்கானாவில் 2018ல் எடுக்கப்பட்டது. வீடியோவில் உள்ள நபர் டிஆர்எஸ் கட்சியின் எம்பிபி தலைவர் இம்மாடி கோபி என்பதை அறிய முடிகிறது.
ஆதாரம்
TRS MP President Immadi Gopi Kicks Woman Over Land Disputes | Police Files Case on TRS MPP | NTV
TRS MPP President Immadi Gopi, an ex-Naxal, kicks woman on chest
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் பேட்டி
amirthakumar-selected-as-state-president-of-tamil-nadu-government-servants-union