தமிழ்நாடு, குஜராத் மாடல் சாலை எனப் பரப்பப்படும் பல்கேரியா மாடல் சாலை !

பரவிய செய்தி
எந்த ஊரு மாடல் இது. இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்து விபத்து நடந்து விடாமல் இருக்க மோடி கண்டுபிடித்து குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட இரண்டு வழிச்சாலை.
மதிப்பீடு
விளக்கம்
மக்கள் செல்லக்கூடிய பாதையில் முழுமையாக இல்லாமல் நடுவில் இருக்கும் பகுதியை விட்டு விட்டு இரு பக்கமும் தாரை கொட்டி அமைக்கப்பட்ட சாலை ஒன்றின் படத்தை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்று பாஜக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களும், இது குஜராத்தில் போடப்பட்டது என திமுக ஆதரவாளர்களும் மாற்றி மாற்றிப் பரப்பி வருவதை பார்க்க முடிந்தது.
சாலை முழுவதும் தாரை கொட்டி பணத்தை வேஸ்ட் செய்வதை விட டயர் படும் இடங்களில் மட்டும் சாலை அமைத்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 10,000 சேமிக்கலாம் .
தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் இருக்கிறது என்னும் நிலையில் ஒரு கிலோமீட்டர் 10 ஆயிரம் என்றால் ஒரே ஆண்டில் 300 கோடி… pic.twitter.com/WSKqCrhCUa
— ஷிபின் Shibin (@Shibin_twitz) October 30, 2023
எந்த ஊரு மாடல் இது 😜 pic.twitter.com/1bXYAOqxEG
— Savukku Shankar Army (@Mahi1987Mass) October 29, 2023
இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்து விபத்து நடந்து விடாமல் இருக்க
மோடி கண்டுபிடித்து குஜராத்தில் செயல்படுத்தப் பட்ட இரண்டு வழிச்சாலை 🤣🤣🤣 pic.twitter.com/sfOSJSEuQD
— Senthil Thangavel (@Senthilthanavel) October 29, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 அக்டோபர் 12ம் தேதி Lifbg எனும் இணையதளத்தில், ” Luxury in Dragalevtsi: Asphalted street in the skakar district blew up the net ” என்ற தலைப்பில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.
Dragalevtsi குறித்து தேடுகையில், அது பல்கேரியா நாட்டின் சோபியா எனும் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள இடம் என்பதை அறிய முடிந்தது.
மேற்கொண்டு தேடுகையில், அக்டோபர் 17ம் தேதி For Sofia எனும் தன்னார்வு அமைப்பின் முகநூல் பக்கத்தில், வைரல் செய்யப்படும் புகைப்படத்தை போன்று வேறு சில புகைப்படங்களை இணைத்து சோபியா மாநகராட்சியைக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவுகள் அனைத்தும் பல்கேரிய மொழியில் வெளியிடப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க : கோவை குனியமுத்தூர் சாலை எனப் பரவும் பெங்களூரில் விண்வெளி வீரர் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ !
மேலும் படிக்க : தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு, குஜராத் மாடல் சாலை எனப் பரப்பப்படும் புகைப்படம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அப்புகைப்படம் பல்கேரியா நாட்டின் சோபியா மாநகராட்சி பகுதியில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.