Fact Checkஅரசியல்சமூக ஊடகம்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை தாக்கி கொல்வதாக வடநாட்டில் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுகிறார்கள். பீகார் அரசு, உத்தரப் பிரதேச அரசு, ஜார்கண்ட் அரசுகள் அமைதியாக உள்ளன. இந்தி பேசும் மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறை இந்தியாவில் இதற்கு முன் பார்த்ததில்லை.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசியல்ரீதியான விவாத பொருளாக மாறி உள்ளது.

Advertisement

இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிபுரியும் தமிழ்நாட்டில் வடமாநில மற்றும் இந்தி பேசும் மக்கள் மீது கொடூரமாக தாக்குதல்கள் நடைபெறுவதாக முஹமத் தன்வீர் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?

வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக கூறும் பதிவில் முதலில் உள்ள வீடியோ, கோவை நீதிமன்ற பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது. அவர் வடமாநில தொழிலாளர் அல்ல. எற்கனவே இந்த வீடியோ தமிழ்நாட்டில் வைரலானது.

பிப்ரவரி 13ம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த கோகுல் என்பவரை ஓட ஓட விரட்டி கொலை செய்து உள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை தமிழ்நாடு காவல்துறை கைதும் செய்துள்ளனர்.

மூன்றாவதாக உள்ள வீடியோ குறித்து தேடுகையில், அந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் என அறிய முடிந்தது. பிப்ரவரி 19ம் தேதி ஏஎன்ஐ இந்தி செய்தியில் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது.

Twitter link 

இதே வீடியோவை, ராஜஸ்தானில் சிவராத்திரி அன்று இந்து சாமியாரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்கியதாக மதரீதியில் வதந்தி பரப்பப்பட்டது. இக்கொலை நிலம் தொடர்பாக உறவினர்கள் இடையே நிகழ்ந்தது என யூடர்ன் ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

படிக்க : Was a temple priest attacked by Muslim fundamentalists in Rajasthan during Maha Shivratri?

இரண்டாவதாக உள்ள வீடியோவில் ஒருவர் இரத்த காயங்களுடன் காணப்படுகிறார். அந்த வீடியோவில், ” இந்திகாரர்கள் அவர்களிடையே அடித்துக் கொண்டனர் ” என பின்னணியில் இருவர் தமிழில் பேசுவதைக் கேட்க முடிந்தது. எனினும், இச்சம்பவம் எங்கு நிகழ்ந்தது என அறிய முடியவில்லை.

Twitter link | Archive link 

இதற்கிடையில், முஹமத் தன்வீர் உடைய பதிவை குறிப்பிட்டு ட்விட்டரில் எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் ட்விட்டர் பதிவில், ” இரண்டாவதாக உள்ள வீடியோ பீகார் மற்றும் ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையே தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வீடியோவிலும் பேசி இருக்கிறார்.

Twitter link 

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் பரப்பப்படும் பதிவில் உள்ள 3 வீடியோக்களும் தவறான வீடியோக்கள் மற்றும் தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button