This article is from Sep 30, 2018

தமிழகத்தில் மீண்டும் வருகிறது வேதாந்தா !

பரவிய செய்தி

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி. ஹைட்ரோகார்பன் எடுக்கும் இடங்களில் 3-ல் 2 இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியா முழுவதும் 55 புதிய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பான உரிமத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், அதிக அளவிலான இடங்களை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது மத்திய அரசு.

விளக்கம்

தமிழகத்தில் காவிரிப் படுக்கையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதால் திட்டத்தை கைவிடுவதாகவும், அதற்கு பதில் மாற்று இடம் அளித்தால் ஏற்பதாக ஜெம் நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியது.

ஹைட்ரோகார்பன் திட்டம் மக்களின் விருப்பம் இல்லாமல் தமிழகத்தில் செயல்ப்படுத்த வாய்ப்புகள் இல்லை என மத்திய, மாநில அரசை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றிய செய்திகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்த செய்த தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பான விடுத்த டென்டரில் இறுதி செய்யப்பட்ட விண்ணப்பம் பற்றிய தகவலை மத்திய அரசு வெளியிட்டது. அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த லண்டன் வேதாந்தா குழுமத்தின் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

புதிதாக தொடங்க உள்ள 55 இடங்களில் 41 இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், 9 இடங்கள் ஆயில் இந்தியா, ஓஎன்ஜிசிக்கும் 2 இடங்களும், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், கெயில், ஹிந்துஸ்தான் ஆயில் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றிக்கு தலா ஒரு இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

” தமிழகத்தின் காவிரிப் படுக்கையில் மட்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க 3 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், 1 இடம் ஓஎன்ஜிசி-க்கும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது ”

இந்தியாவில் எண்ணெய் ஆய்வு மேற்கொள்ளும் 1,02,000 சதுர கிமீ பரப்போடு ஒப்பிடுகையில் புதிய 55 இடங்களுக்கான நிலப்பரப்பு 59,282 சதுர கிமீ-ஐ கொண்டுள்ளது. இவை அஸ்ஸாம்-அரகான், மும்பை கடல், கம்பே, ராஜஸ்தான், கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுக்கை, காவேரி, குட்ஜ், சுராஷ்டிரா, ஹிமாலயா பகுதிகள், கங்கை படுக்கை என பல பகுதிகளில் செயல்படுத்த உள்ளன.

ஓஎன்ஜிக்கு நிலப்பகுதியிலும், வேதாந்தா நிறுவனத்திற்கு கடல் பகுதிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து சில மாதங்களே ஆகிய நிலையில் வேதாந்தா நிறுவனத்திற்கு இந்தியாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிக இடங்களை ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. மக்களின் எதிர்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று பொருந்திருந்தே பார்க்க வேண்டும்

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader