This article is from May 26, 2019

தமிழ்நாட்டின் ரூ. 5,454 கோடியை தராத மத்திய அரசு !

பரவிய செய்தி

2017-18 ஆண்டுக்கான IGST -ல் தமிழ்நாட்டின் பங்கான 5,423 கோடியை இதுவரை மத்திய அரசு கொடுக்கவில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

2017-18 ஆம் ஆண்டிற்கான IGST-ல் தமிழ்நாட்டிற்கு தவறான கணக்கீட்டில் 42% மட்டுமே அளிக்கப்பட்டது. இதில், மீதமுள்ள 5,454 கோடி நிலுவையை அளிக்குமாறு தமிழக முதல்வர் மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

விளக்கம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிஜேபி கட்சியின் ஆதரவாளர்கள் கூறும் ஒரு வாக்கியம் என்னவென்றால், ” நீங்கள்(தமிழ்நாடு) ஓட்டு போட்டு மோடி ஆட்சிக்கு வரவில்லை. இனி மோடி என்ன செய்தார் என கேட்கக் கூடாது ” என்கின்றனர். இதுபோன்ற வாசகங்களை சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, வீடியோ பதிவுகளிலும் பார்க்க முடிகிறது. இந்த கருத்திற்கு பதில் அளித்த பதிவில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி நிலுவை வைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இந்திய அளவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதன்மையானவற்றில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தின் பொருளாதாரம் வட இந்திய மாநிலங்களை ஒப்பிடும் பொழுது நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

மத்திய அரசிற்கு அதிக வரியினை செலுத்தி குறைவான நிதியை பெற்று வருகிறது தமிழகம். 2017-18 நிதியாண்டில் Integrated Goods and Service Tax-ன் தமிழ்நாட்டின் பங்கான 5,454 கோடி நிலுவையை அளிக்காமல் இருந்துள்ளது மத்திய அரசு.

IGST திட்டத்தின் படி, வரியில் 50% ஆனது மத்திய அரசிற்கும்(CGST) மற்றும் மீதமுள்ள 50% ஆனது மாநிலம் மற்றும் யூனியன் அரசிற்கும்(SGST) செல்லும். இதில், மத்திய அரசிற்கான 50% CGST-ல் இருந்து 42% மாநிலம் மற்றும் யூனியன் அரசிற்கு பகிர்ந்தளிக்கப்படும். ஆதாரங்களின்படி, 50%CGST-ல் 42% அளிப்பதால் 21%CGST+50%SGST= 71% IGST-ஐ மாநில மற்றும் யூனியன் அரசு பெறும். ஆனால், 2017-18 நிதியாண்டில் மாநில அரசு 42% IGST மட்டுமே பெற்றுள்ளது.

2017-18-ல் பெறப்பட்ட IGST தொகையில் 50% நிதியை SGST பிரிவில் மாநில அரசிற்கு வழங்கி இருக்க வேண்டும். தற்போது தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் 5,454 கோடி நிலுவை இருக்கிறது. மத்திய அரசு நிலுவை தொகையை அளிக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

2019-20 பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர், உதய் (UDAY) திட்டம் அறிமுகப்படுத்தியது மற்றும் 7th Pay Commission ஆகியவற்றால் மாநிலத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
. இந்நிலையில், தமிழக அரசு வெற்றிகரமாக ஜிஎஸ்டி-யை நடைமுறைபடுத்தி வந்தாலும் மத்திய அரசு 2017-18 நிதியாண்டிற்கான IGST தொகையான ரூ. 5,454 கோடி வழங்காமல் இருப்பதனால், மத்திய அரசு நிலுவையை விரைவில் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் நிதி ஆதாரத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன. இங்குள்ள மாநிலங்களில் பெறும் நிதியை அடிப்படையாக கொண்டு வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த சில ஆண்டுகளின் தென்னிந்திய மாநிலங்களின் GDP விகிதத்தை அறிந்து இருந்தால்

தேசம் அனைவருக்கும் சொந்தமானது. குறிப்பிட்ட, ஒரு மொழிக்கோ, ஒரு மதத்துக்கோ, ஒரு இனத்துக்கோ, ஓர் கட்சிக்கோ சொந்தமானது அல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader