செப்டம்பர் 14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என பரவும் வாட்ஸ்அப் வதந்தி !

பரவிய செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.K.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிக்கை (04.09.20). தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் . மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டயாம் அணியவேண்டும். திரையரங்குகள் அக்டோபர் 1ம் தேதி திறக்கப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இருக்கைகளும் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். தமிழகம் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பும். K.பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சர். வெளியீடு : இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை. சென்னை -9
மதிப்பீடு
விளக்கம்
செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிகத்தில் ரயில் சேவையும் தொடங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அக்டோபர் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் போலியான அறிக்கை ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் முத்திரை வைத்து வெளியான போலியான அறிக்கையில், ஒழுங்கற்ற முறையில் வாக்கியங்கள் இடம்பெற்று இருப்பதை காண முடிகிறது. செப்டம்பர் 14-ல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என பரவிய வாட்ஸ் அப் தகவல் போலியானது என தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.