This article is from Feb 28, 2019

தமிழகக் காட்டில் தீ வைத்ததில் இறந்த உயிரினங்களா ?

பரவிய செய்தி

தமிழகத்தின் வனத்தில் உள்ள உயிரினங்களை உயிருடன் தீயிட்டு அழித்து வருகிறார்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

தீயில் எரிந்து இறந்த வன உயிரினங்கள் என வைரலாகி வரும் புகைப்படங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல. பரவும் படங்கள் குறித்த முழுமையான தகவல்களைத் தொடர்ந்து படியுங்கள்.

விளக்கம்

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீப்பற்றியதாக செய்திகளில் படிக்க நேர்ந்தது. வனத்திற்கு தீ வைத்த 3 பேரை கைது செய்ததாகவும் செய்திகளில் வெளியாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வனத்திற்கு தீ வைத்து எரித்ததில் முயல், குரங்கு, பாம்பு, செம்மறி ஆடுகள் பல உயிரினங்கள் உயிருடன் தீயில் வெந்து இறந்துள்ளதாக சில புகைப்படங்கள் பகிரப்படுகிறது. அப்புகைப்படங்களை பார்க்கும் பொழுது வேதனையை அளித்து இருக்கும்.

எனினும், தமிழகத்தில் பரவிய அதே படங்களே கர்நாடகாவிலும் பரவி உள்ளன. ஆம், கர்நாடகாவின் பந்திபூர் புலிகள் இருப்பு பகுதியில் உள்ள வனத்தில் காட்டுத்தீ உருவாகி 2,000 ஹெக்டர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியதாக பரவி வந்தன. அங்கும் இதே படங்கள்!

ஆகையால், பரவி வரும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி அறிய தேடுகையில் இறந்த விலங்குகளின் புகைப்படங்கள் குறித்த சரியான தகவல்கள் கிடைத்தன.

முயல் : 

முயல் அமர்ந்த நிலையில் தீயில் கருகி இறந்து கிடப்பதைப் புகைப்படம் எடுத்தவர் chris Runsanowsky. 2018 நவம்பர் 8-ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள Malibu -ன் Woolsey தீ விபத்தில் இறந்த முயலை நவம்பர் 14-ம் தேதி புகைப்படம் எடுத்துள்ளார்.

செம்மறியாடுகள் : 

2012 ஜூலை 23-ம் தேதி ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு எல்லைப் பகுதியில் உள்ள La junguera அருகே இருக்கும் Daminus-ல் ஏற்பட்ட காட்டுத்தீயில் 500-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் இறந்துள்ளன. இதில், 17,000 ஏக்கர் நிலபரப்பு எரிந்து நாசமாகின.

உராங்குட்டான் : 

இந்தியாவில் உராங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இறந்த நிலையில் இருக்கும் உராங்குட்டான், இந்தோனேசியாவில் உள்ள போர்னியோவின் Kutai National Park-ல் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவை. தாய் உராங்குட்டான் உடன் இரு குட்டிகளும் இறந்துள்ளன என்று 2016 மார்ச் 3-ம் தேதி செய்தி நிறுவனங்களில் வெளியாகி இருக்கிறது.

பாம்பு :

கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Necocli பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த பாம்பின் புகைப்படம் Antioquia துறையால் வெளியாகியது. இப்படங்கள் இணையத்தில் 2015 ஏப்ரல் 24-ம் தேதி வெளியானது.

ஆக, கிடைத்த ஆதாரங்கள் மூலம் காட்டுத்தீயில் இறந்த உயிரினங்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவை என தெளிவாகியது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் வனத்தில் ஏற்படும் தீ விபத்தால் வன உயிரினங்கள் எரிந்து இறப்பது அதிகம் நிகழ்கிறது. காடுகளையும், பிற உயிரினங்களையும் பாதுகாப்பதே எதிர்கால உலகிற்கு ஆபத்தை விளைவிக்காது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader