கர்நாடகாவில் தமிழர்கள் மீண்டும் தாக்கப்படுவதாக 2016ன் வீடியோவைப் பரப்பும் பாஜக ஆதரவாளர்கள் !

பரவிய செய்தி
கர்நாடகாவில் கான்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய படி, தமிழன் அடி வாங்க துவங்கி விட்டான். தமிழனுக்கு நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் இருந்த பிஜேபி ஆட்சியை அகற்றி விட்டு தமிழர் விரோத கான்கிரஸ் ஆட்சிக்கு வர தானே ஓடாக உழைத்தாய் தமிழின துரோகிகளே?
மதிப்பீடு
விளக்கம்
காவிரி மேலாண்மை ஆணையம் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடும்படி கர்நாடகாவிற்கு ஆணையிட்டது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று (செப்டம்பர் 26) முழுவதும் பந்த் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தமிழர்கள் அடிவாங்க துவங்கிவிட்டார்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பாஜக ஆதரவாளர்களால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் கான் கிராஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய படி, தமிழன் அடி வாங்க துவங்கி விட்டான். தமிழனுக்கு நேர்மையாகவும் பாதுகாப்பாக இருந்த பிஜேபி ஆட்சியை அகற்றி விட்டு தமிழர் விரோத கான் கிராஸ் ஆட்சிக்கு வர தானே ஓடாக உழைத்தாய் தமிழின துரோகிகளே ? pic.twitter.com/YltR6MqmHF
— Sankar Ganesh (@SankarG42781554) September 26, 2023
கர்நாடகாவில் கான் கிராஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய படி, தமிழன் அடி வாங்க துவங்கி விட்டான். தமிழனுக்கு நேர்மையாகவும் பாதுகாப்பாக இருந்த பிஜேபி ஆட்சியை அகற்றி விட்டு தமிழர் விரோத கான் கிராஸ் ஆட்சிக்கு வர தானே ஓடாக உழைத்தாய் தமிழின துரோகிகளே ? pic.twitter.com/5htJ4x1JW7
— T. Ravikumar (@TRaviku49546497) September 26, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது பதிவு செய்யப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதுகுறித்து மேலும் தேடியதில், கடந்த 2016 செப்டம்பர் 13 அன்று Red Pix Alpha என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ “காவிரி பிரச்சனை வரிசையில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த வயதான லாரி டிரைவர் கன்னடம் பேச கட்டாயப்படுத்தப்பட்டார் – கட்டாயம் பாருங்கள்” என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டிருந்தது.
1:04 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், “இன்று காலை முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் வன்முறையாளர்கள் இந்த வயதான ஓட்டுனரை கன்னடம் பேசுமாறு கட்டாயப்படுத்தி அடித்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.” என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காவிரி நீர் விவகாரம் வரலாறும் இறுதித்தீர்ப்பும்!.
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், காவிரி நீர் பிரச்சனையால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், இது கடந்த 2016ல் ஏற்பட்ட காவிரி பிரச்சனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.