டான்சானியாவில் உள்ள ஏரியில் பறவைகள் கற்களாக மாறுகின்றனவா ?

பரவிய செய்தி

டான்சானியாவில் இருக்கும் ஏரியில் பறவைகள் கற்களாக மாறி வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

காரத்தன்மை அதிகம் கொண்ட நட்ரோன் ஏரியில் பறவைகளுக்கு இவ்வாறு நிகழ்ந்து உள்ளது. இறந்த பறவைகள் கற்கள் போன்று காட்சியளிக்கின்றன. அப்பகுதியை பற்றி விரிவாக படிக்கவும்.

விளக்கம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருக்கும் நட்ரோன் ஏரியில் பறவைகளின் உடல் கற்கள் போன்று காட்சியளிக்கின்றன. எனினும், இது எவ்வாறு நிகழ்ந்து என்பது தெரியாமல் இருந்து வந்தது.

Advertisement

இந்நிலையில், ரிக் ப்ராண்ட் என்ற புகைப்பட கலைஞர் நட்ரோன் ஏரியில் பறவைகள் கல் போல் இருக்கும் காட்சிகளை படமாக்கி உள்ளார். அந்த படங்கள் உலக அளவில் பிரபலமடைந்தது.

நட்ரோன் ஏரியில் அல்கலினிட்டி(காரத் தன்மை) மிக அதிகமாக இருக்கிறது. அந்த ஏரியின் ph மதிப்பு 10.5 அளவிற்கு உயர்ந்து, ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக மாறியுள்ளது. இதனால், தோல், கண்கள் உள்ளிட்டவை எரியக்கூடும். விலங்குகள் அதனை ஏற்றுக் கொண்டு வாழ்வது கடினம் என்கிறார்கள்.

ஏரிக்கு அருகில் இருக்கும் மலைகளில் எரிமலைகள் இருப்பதனால் சோடியம் கார்போனேட் மற்றும் பிற மினரல்கள் ஏரி நீரில் கலந்ததால் நீரின் தன்மை மாறியது. இதன் விளைவாக பறவைகள் இறந்து, அதன் உடல்கள் கல் போல் காட்சி அளித்து இருக்கலாம்.

நட்ரோன் ஏரியில் பறவைகள் மற்றும் வௌவால்கள் உடல்களை புகைப்படங்கள் எடுத்த ரிக் ப்ராண்ட் கூறுகையில், ” பறவைகள் எவ்வாறு இறந்தன என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், அந்த நீர் அதிக அளவில் சோடா மற்றும் காரத்தன்மை உடன் இருக்கிறது ” என்றுள்ளார்.

Advertisement

இது குறித்த செய்திகள் 2013-ம் ஆண்டிலேயே வெளியாகி இருக்கின்றன. இறந்த பறவைகள் உயிருடன் இருப்பது போன்று காட்சியளிப்பதை தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். நட்ரோன் ஏரி கடலிலோ அல்லது ஆற்றிலோ கலக்க கூடியதல்ல.

பறவைகள் இருக்கும் நிலையை பார்க்கும் பொழுது கடினமான காரத்தன்மை கொண்ட நீர் வறட்சி காலத்தில் ஆவியாகும் பொழுது வேதிப்பொருட்களின் விளைவால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button