This article is from Oct 06, 2021

டாடாவின் 150வது ஆண்டு விழாவிற்கு கார் பரிசளிப்பதாக பரவும் வாட்ஸ் அப் வதந்தி !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

டாடா குழுமத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் நினைவாக கார் பரிசை பெறலாம் என வாட்ஸ்அப் ஃபார்வர்டு ஒன்று சுற்றி வருகிறது. இது உண்மையானது அல்ல, மக்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட இணையதளமே.

Twitter link 

வைரலாகும் தகவல் குறித்து டாடா குழுமம் தன் ட்விட்டர் பக்கத்தில், ” இந்த விளம்பர நடவடிக்கைக்கு டாடா குழுமமோ அல்லது அதன் நிறுவனங்களோ பொறுப்பல்ல. தயவுசெய்து இணைப்பைக் கிளிக் செய்யவோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்பவும் வேண்டாம் ” என பதிவிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க : காதலர் தின பரிசென பரவும் மோசடி லிங்க்.. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது ?

இதற்கு முன்பாகவும், பரிசுகள் அளிப்பதாக இதுபோன்ற மோசடி ஃபார்வர்டு தகவல்கள் பல பரப்பப்பட்டு இருக்கின்றன. வைரல் செய்யப்படும் லிங்கிற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை மேலே உள்ள கட்டுரையில் விரிவாக படிக்கலாம்.

மேலும் படிக்க : பணம் கிடைக்கும் என நினைத்து கமெண்ட் செய்யும் மக்கள்| ஜாக்கிசான் பெயரில் மோசடி !

முடிவு : 

நம் தேடலில், டாடா குழுமத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி கார் பரிசு அளிப்பதாக பரப்பப்படும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் போலியானது. இதுபோன்ற பரிசு, பணம் சம்பந்தப்பட்ட இணைப்புகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader