தெலங்கானாவில் பர்தா அணிந்து கலவரம் செய்ய முயன்ற ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கைதா ?

பரவிய செய்தி
ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிகள் சதி அம்பலம் .. தெலுங்கானாவில் பர்தா அணிந்து கலவரத்தை பரப்ப முயற்சி செய்த ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் கைது செய்யப்பட்டனர்..
மதிப்பீடு
விளக்கம்
தெலங்கானா மாநிலத்தில் பர்தா அணிந்து மாறுவேடத்தில் வந்து கலவரத்தை உண்டு பண்ண முயன்ற ஆர்எஸ்எஸ்/ பாஜகவைச் சேர்ந்தவர்களின் சதி அம்பலமாகி உள்ளதாக காவல்துறையால் பிடிக்கப்பட்ட பர்தா அணிந்த ஆணின் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிகள் சதி அம்பலம் ..
தெலுங்கானாவில் பர்தா அணிந்து கலவரத்தை பரப்ப முயற்சி செய்த ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் கைது செய்யப்பட்டனர்.. pic.twitter.com/8nfssxHZ3j
— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim7) December 9, 2021

Facts#
The burqa clad man in this video was found carrying liquor bottles
illegally across state from Telangana to Kurnool, Andhrapradesh. Caught by Excise police, was reported on 7-8-2020 in Kurnool Taluka Police station.https://t.co/GDdPPW7wK5
Stop spreading misinformntion— Dr.Fakkeerappa Kaginelli IPS (@Fakkeerappa_IPS) August 16, 2020
மேலும் படிக்க : பெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா ?
இதற்கு முன்பாக, 2020-ல் பெங்களூரில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க பர்தா அணிந்த வந்த ஆர்எஸ்எஸ் நபர் பிடிபட்டதாக தவறான வீடியோ பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், தெலுங்கானாவில் பர்தா அணிந்து கலவரத்தை பரப்ப முயற்சி செய்த ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. இது 2020-ல் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பர்தா அணிந்து மதுபான பாட்டில்களை கடத்திய கும்பல் கைது செய்யப்பட்ட வீடியோவே என அறிய முடிகிறது.