தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
திருப்பதியில் சீமான் சிறப்பு தரிசனம் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்தார்.
மதிப்பீடு
விளக்கம்
2023 மார்ச் 22ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பை(யுகாதி) முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்து தெரிவித்தும், திமுகவைச் சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி மற்றும் மகனுக்கு தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக் கூறியும் பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் விமர்சன மோதலாக மாறியது.
இந்நிலையில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்ததாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் நியூஸ் கார்டில் i தமிழ் என்ற லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதுகுறித்து i Tamil News சேனலின் சமூக வலைதள பக்கங்களில் தேடிப் பார்க்கையில் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
ஆகையால், அந்த நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அந்த புகைப்படம் 2022 செப்டம்பர் 3ம் தேதி சமயம் தமிழில் வெளியான செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
2022 செப்டம்பர் 3ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி திருக்கோவிலில் சீமான் தரிசனம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த வீடியோ நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் வெளியாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் சீமான், 22.03.2023(இன்று) சென்னை பம்மலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்று, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இன்று 22.03.2023 சென்னை பம்மலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய போது,https://t.co/j0scdJYZRD pic.twitter.com/wb9xk1vpYy
— சீமான் (@SeemanOfficial) March 22, 2023
மேலும் படிக்க : நாம் தமிழர் கட்சியின் சீமான் பற்றி பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு !
இதற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் குறித்து பரப்பப்பட்ட வதந்தி குறித்தும், சீமான் குறித்து பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு கட்டுரையும் வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !
முடிவு :
நம் தேடலில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்தார் எனப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது. அந்த புகைப்படம் கடந்த ஆண்டு திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி திருக்கோவிலில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.