ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல முடிவா ?

பரவிய செய்தி

வறட்சியால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆஸ்திரேலியாவில் 10,000-க்கு மேற்பட்ட ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி சுட்டுக் கொல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

விளக்கம்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பாலைவனப் பகுதிகள் குறித்து பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அங்கு 18% பகுதிகள் பாலைவனமாக இருக்கின்றன. மேலும், அந்நாட்டில் 35% பகுதிகளில் குறைந்த அளவிலான மழைப் பொழிவே நிகழ்கிறது.

Advertisement

வெப்பமயமாதல் மட்டுமின்றி அதிக அளவிலான வறட்சி காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய காடுகளில் வசித்த பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பலவகையான உயிரினங்கள் இறந்தன. காட்டுத் தீயில் உயிரினங்கள் சிக்கித் தவித்த புகைப்படங்கள், வீடியோக்கள் உலக அளவில் கவனத்தை பெற்றது.

ஒருபுறம் வன விலங்குகள் காட்டுத்தீயில் தீக்கிரையாகி இறந்தால், மறுபுறம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒட்டகங்களை ஆஸ்திரேலிய அரசே சுட்டுக் கொல்ல நடவடிக்கை மேற்கொன்டு வருவதாக வெளியான செய்திகள் சமூக வலைதளங்களில் கண்டனங்களையும், அதற்கு எதிரான குரல்களையும் பெற்று வருகிறது.

தோராயமாக 10 ஆயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டர்கள் மூலம் சுட்டுக் கொல்ல ஆஸ்திரேலியாவில் முடிவு செய்து இருப்பது உண்மையே. தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஓட்டங்கள் கடுமையான வறட்சிக் காலங்களில் மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு வந்து தொட்டிகள், பைப்புகள் உள்ளிட்ட தண்ணீர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தண்ணீரை குடிப்பதாகவும், இதனால் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகக் கூறி உள்ளூர் மக்களால் புகார் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

Anangu Pitjantjatjara Yankunytjatjara (AYP) என்ற பூர்வக்குடி நிலப்பகுதியில் இருந்து தொழில்முறை துப்பாக்கிச் சுடும் வீரர்கள் மூலம் ஒட்டகங்களை கொல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

தண்ணீர் பிரச்சனை மட்டுமின்றி, இந்த ஒட்டகங்களின் கழிவுகளில் இருந்து ஒரு டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயு உருவாகுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆகையால், அந்நாட்டில் ஒட்டகங்களை சுட்டுக் கொல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐந்து நாட்களுக்கு நடைபெறும் எனக் கூறி இருந்தனர்.

பயணத்திற்கு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில்19-ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நீக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு 8 அல்லது 10 ஆண்டுகளில் ஒட்டகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கூறுகின்றனர். இது தொடர்பான செய்திகள் சர்வதேச அளவில் அனைத்து செய்திகளிலும் வெளியாகி வருகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button