கென்யாவில் WHO&UNICEF தடுப்பூசியில் கருச்சிதைவு ஹார்மோன்களா ?

பரவிய செய்தி

கென்யாவில் கறுப்பின மக்களின் பெருக்கத்தைத் தடுக்க தடுப்பூசி மூலம் pregnancy hormone hCG என்ற கருத்தடை ஹார்மோன்களை செலுத்தி உள்ளது யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார மையம்.

மதிப்பீடு

சுருக்கம்

கென்யாவில் நீண்ட வருடங்களாக இருந்து வந்த தடுப்பூசி குறித்த சர்ச்சையில்  கென்ய  பிஷப்கள் குழு வழங்கிய மாதிரி சோதனையின் முடிவுகளை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் ஏற்கவில்லை.  கென்ய அரசு தடுப்பூசிகளில் செய்த சோதனையில் positive என முடிவுகள் வரவில்லை எனக் கூறுகின்றனர்.

Tetanus Vaccine குறித்த தவறானக் கூற்றை யூனிசெஃப் மறுத்து விளக்கமளித்துள்ளது.

விளக்கம்

2014-ம் ஆண்டில் கென்ய நாட்டில் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார மையம் இணைந்து 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களுக்கு டெட்டனஸ் தடுப்பூசி(Tetanus Vaccine) முகாம்கள் நடத்தி அந்நாட்டின் கறுப்பின மக்களின் பெருக்கத்தை தடுக்க செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Tetanus Vaccine :

Advertisement

பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படும் நோய் தொற்றான டெட்டனஸ்(Tetanus) ஆனது பிறக்கும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு அதிகம் பாதிப்பை உண்டாகும். டெட்டனஸ் தடுப்பூசி மூலம் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். டெட்டனஸ் நோயானது போலியோ, சின்னம்மை போன்றதே. ஆக, 15 முதல் 49 வயது உள்ள பெண்களுக்கு டெட்டனஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

டெட்டனஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத 16 நாடுகளில் ஒன்றாக கென்யா தேசமும் உள்ளது. 1988-ல் உலக அளவில் டெட்டனஸ் நோயால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,87,00 டெட்டனஸ் தடுப்பூசி முயற்சியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-ல் 34,019 ஆக குறைந்து உள்ளது.

குற்றச்சாட்டு :

2014-ல் கென்ய பிஷப் குழு மற்றும் சர்வதேச கத்தோலிக் மருத்துவ சபை ஆனது யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார மையம் இணைந்து வழங்கிய டெட்டனஸ் தடுப்பூசியில் pregnancy hormone hCG நிரப்பி பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் கருச்சிதைவுவை ஏற்படுத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தை தடுக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

Advertisement

இதற்காக, தடுப்பூசி முன் மாதிரிகளை ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்த போது 9 Vial-களில் 6-ல் ஹார்மோன்கள் இருப்பது கண்டிக்கப்பட்டதாகவும் பிஷப் குழு குறிப்பிட்டனர்.

ஆதாரம் எங்கே ?

தனிப்பட்ட முறையில் பிஷப்கள் குழு செய்த மாதிரி சோதனையின் முடிவுகளை கென்யாவின் சுகாதார அமைச்சகம் ஏற்க மறுத்தது. அவைகள், திறக்கப்பட்ட தடுப்பூசி மாதிரிகளாகும். மேலும், சோதனை செய்யப்பட்ட இரண்டு ஆய்வகங்களில் கொடுக்கப்பட்ட மாதிரிகளில் தடுப்பூசிகளுக்கு பதிலாக தடுப்பூசி பயன்படுத்திய பெண்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் போன்ற மாதிரிகளை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

டெட்டனஸ் தடுப்பூசியில் pregnancy hormone hCG இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார மையம்(WHO) மறுத்தன. இதற்கான கட்டுரையும் Forbes பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

pregnancy hormone hCG என்ற ஹார்மோன் கர்ப்பகாலத்தில் நச்சுக்கொடியில் உருவாகும். மேலும், அனைத்து வயது ஆண் மற்றும் பெண்களின் பிட்யூட்டரி சுரப்பிகளில் கூட உருவாகும். எனினும், அதிக அளவு செல்வது கருவுருதலுக்கு ஆபத்து “ என யூனிசெஃப் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.

மேலும், யூனிசெஃப் மற்றும் WHO-வின் தடுப்பூசிகள் பாதுகாப்பானதே !. இதன் பாதுகாப்பு உறுதி மூன்று அடுக்குகளான சர்வதேச சோதனை அமைப்பால் உறுதியளிக்கப்பட்ட பின்னரே டெட்டனஸ் தடுப்பூசி 52 நாடுகளில் 130 மில்லியன்களுக்கும் அதிகமான பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளனர்.

பிஷப் மற்றும் கத்தோலிக்க அமைப்பின் குற்றச்சாட்டுகளை ஏற்காத கென்ய அரசு டெட்டனஸ் தடுப்பூசியின் மாதிரிகளை சோதனை செய்ய ஜெர்மனி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியது.

“  கென்யா மருந்து மற்றும் நச்சு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனிக்கு அனுப்பிய டெட்டனஸ் தடுப்பூசி மாதிரிகள் நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளதாக அறிவித்தது ”.

முடிவு :

pregnancy hormone hCG  ஹார்மோன் இயல்பாகவே பெண்களின் உடலில் இருப்பதாக உலக சுகாதார மையம் மற்றும்  யூனிசெஃப் கூறுகிறது. மேலும், பிஷப் குழு சோதனை செய்த மாதிரிகள் மனித மாதிரிகளே !.

டெட்டனஸ் தடுப்பூசியில் pregnancy hormone hCG இருப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் சமர்பித்து நிரூபிக்கப்படவில்லை.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close