தஞ்சைப் பெரியக் கோவில் கல்வெட்டுகளில் இந்தி திணிப்பா ?

பரவிய செய்தி
தஞ்சைப் பெரியக் கோவிலில் இந்தி திணிப்பு அரங்கேறுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
தஞ்சைப் பெரியக் கோவிலில் தமிழ் மொழியில் இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டும், கோவில் பகுதிகளில் புதிதாக செதுக்கப்பட்ட இந்தி மொழிக் கல்வெட்டுகள் திணிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களின் கோபத்தை தூண்டியது.
தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் புதிதாக திணிக்கப்படுவதாக பரவிய செய்திகள் யாவும் உண்மை இல்லை. ஆம், பரவும் வீடியோக்கள், மீம் பதிவுகளில் இருக்கும் கல்வெட்டுகளில் இருக்கும் மொழி ஹிந்தி அல்ல. அதில், இருக்கும் மொழி மாராத்தி.
தஞ்சை ஓலைச் சுவடிகள் குறித்த தகவலை வீடியோவில் காண்க :
16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தஞ்சைப் பகுதியை மராட்டியர்கள் ஆட்சிப் புரிந்த வரலாறும் உண்டு. அதில், மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் கோவிலில் நிகழ்ந்த சீரமைப்பு பணிகளின் போது அங்கு நிகழ்ந்தவை பற்றிய விவரங்கள் அந்த கல்வெட்டுகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மராத்திய மொழியில் இருக்கும் கல்வெட்டுகளை இந்தி மொழிக் கல்வெட்டுகள், திணிக்கப்பட்ட கல்வெட்டுகள் என தவறாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். தஞ்சை பெரியக் கோவிலில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் புதிதாக திணிக்கப்பட்டதாகவும் கூறுவதும் வதந்திகளே!