ராமர் கோவில் திறப்பிற்கு இத்தாலியப் பிரதமர் வாழ்த்து கூறும் வீடியோ எனப் பரவும் பொய் !

பரவிய செய்தி

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு இந்துக்களுக்கு இத்தாலிய பிரதமர் செய்தி..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

யோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இந்நிலையில் இத்தாலிய பிரதமரான ஜியார்ஜியா மெலோனி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறி 12 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து இத்தாலிய பிரதமரான ஜியார்ஜியா மெலோனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் இதே வீடியோவை கடந்த ஜனவரி 15 அன்றே “நன்றி, நீங்கள் தான் என்னுடைய பலம்” என்று குறிப்பிட்டு தனது பக்கத்தில் பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.

ஆனால் அந்த வீடியோவில் அவர் இத்தாலிய மொழியில் பேசியிருந்ததால், அவரது வீடியோவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆய்வு செய்தோம். அதில், “சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. உண்மையில் இது நிறைய ஊக்கத்தை அளித்தது, நான் இதையெல்லாம் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன். நீங்களே என்னுடைய பலம். உங்களுக்கு என்னுடைய அன்புகள்.” என்று அதில் அவர் பேசியிருந்ததை அறிய முடிந்தது.

இதில் அவர் எந்த இடத்திலும் அயோத்தி ராமர் கோவில் பற்றியோ, ராமர் கோவில் திறப்பிற்காக வாழ்த்து செய்தி பற்றியோ பேசவில்லை. இதை சிலர் தவறுதலாக பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: அண்டார்டிகாவில் ராமர் பிராண பிரதிஷ்டை கொண்டாட்டம் என எடிட் செய்த படத்தை வெளியிட்ட தினமலர் !

இதற்கு முன்பும் அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக பல செய்திகள் தவறாக பரப்பப்பட்டன. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: பூரி ஜெகன்நாதர் யாத்திரை கூட்டத்தின் படத்தை அயோத்தி எனப் பதிவிட்ட பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் !

முடிவு:

நம் தேடலில், ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு இத்தாலியப் பிரதமர் இந்துக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளதாகப் பரவி வரும் வீடியோ தவறானது என்பதையும், அது தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader